• Apr 19 2024

மக்களுக்கு பயனின்றி துறைமுகத்தில் தேங்கியுள்ள மருந்துகள்!

Chithra / Dec 25th 2022, 10:05 am
image

Advertisement

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 29 லட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் 2 மாதத்துக்கு அதிக காலமாக விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருந்து தொகையை விரைவில் பெற்றுத் தருமாறு கோரி பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ்.வீரபண்டார, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


உடைந்த எலும்பு பாகங்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள செல்வந்தர் ஒருவரினால் வழங்கப்பட்ட இந்த மருந்துகள், கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களுக்கு பயனின்றி துறைமுகத்தில் தேங்கியுள்ள மருந்துகள் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 29 லட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் 2 மாதத்துக்கு அதிக காலமாக விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மருந்து தொகையை விரைவில் பெற்றுத் தருமாறு கோரி பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ்.வீரபண்டார, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.உடைந்த எலும்பு பாகங்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள செல்வந்தர் ஒருவரினால் வழங்கப்பட்ட இந்த மருந்துகள், கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement