• May 02 2024

கனடாவில் இருந்து நீளும் ஈழப் பெண்ணின் உதவிக் கரம்..! samugammedia

Chithra / Jul 26th 2023, 10:06 am
image

Advertisement

மிகவேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இப்பூமியில் நாமெல்லாம் நின்று, நிமிர்ந்து பார்க்க நேரமின்றி ஓடிக்கொண்டேயிருக்கிறோம். 

நமது வேலைப்பளு, பொறுப்புக்கள், அழுத்தங்களுக்கு மத்தியில் சக மனிதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான நேரத்தை இழந்துவிட்டோம். 

ஆனால் தம்மைச் சார்ந்திருக்கும் பொறுப்புக்கள் ஒருபுறமிருக்க, சக மனிதனைப் பற்றிச் சிந்திக்கின்ற, அவனது நலன் குறித்துக் கரிசனை கொள்கின்ற, அவனைக் கைகொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற அபூர்வ மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படியொருவரைத்தான் இந்தத் தொகுப்பு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றது.

வங்கி உத்தியோகத்தர், பெண்கள் வலுவூட்டல் சமூகக்கழகத்தின் (Women Empowered Social Club) ஸ்தாபகர், உத்வேகப்பேச்சாளர் எனப் பல்பரிமாணங்களைக் கொண்டியங்கிவரும் திருமதி கவிதா செந்தில், இலங்கையில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்று ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்திசெய்து, திருமணம்செய்து, யுத்த காலகட்டத்தில் நாட்டு நிலைவரத்தினால் ஏற்பட்ட நிர்பந்தத்தின் காரணமாக 1988 ஆம் ஆண்டளவில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்.

அங்கு சென்ற சொற்ப காலத்திலேயே தனியார் வங்கியொன்றில் இணைந்து கொண்ட அவர், அதன்பின்னர் கணக்கியல் துறையில் மீண்டும் அவரது உயர் கல்வியைத் தொடர்ந்து, அதில் பட்டம்பெற்று சுமார் 33 வருடகாலமாக வங்கித்துறை உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார்.

கனடாவில் குடியேறிய ஆரம்ப காலங்கள் மற்றும் அக்காலப்பகுதியில் அவரது அனுபவங்கள் என்பன 'பெண் வலுவூட்டல்' தொடர்பான அவரது சிந்தனை யோட்டம் விரிவடைவதற்கும், அது செயல்வடிவம் பெறுவதற்கும் பெரிதும் பங்களிப்புச்செய்தன. 

'நான் கனடாவுக்குச் சென்ற காலப் பகுதியில் அங்கு பெருமளவான தமிழர்கள் இருக்கவில்லை. எனவே எமக்கு வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில், நான் ஓரளவுக்குத் தெளிவாக செயற்பட்டதன் விளைவாக என்னால் அடுத்தகட்டம் நோக்கி நகரமுடிந்தது. 

இருப்பினும் அக்காலப்பகுதியில் என்னைப் போன்று கனடாவுக்கு வந்த அநேகமான தமிழ்ப்பெண்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கவில்லை.

அவர்கள் பிரதானமாக மொழிப் பிரச்சினைக்கு முகங்கொடுத்ததுடன், இலங்கையில் யுத்த சூழ்நிலையிலிருந்து அங்கு வந்த பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தனர். எனவே பெரும்பாலான பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகள் தேவைப்பட்டன' எனச் சுட்டிக்காட்டும் கவிதா, எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு, அப்பெண்களை உளவியல் ரீதியில் வலுவூட்டும் அதேவேளை, அவர்களுக்கிடையே இடைத் தொடர்புகளைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே 'பெண்கள் வலுவூட்டல் சமூகக்கழகம்' என்ற அமைப்பை சுயமாகவே ஸ்தாபித்ததாகக் கூறுகின்றார்.

அதுமாத்திரமன்றி இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இங்கிருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்த 10 - 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் பலர் உளவியல் ரீதியில் மிகுந்த தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவர்கள் பாடசாலைகளில் மிகவும் காட்டமான (வன்முறையான) முறையில் நடந்து கொண்டதாகவும், அப்பிள்ளைகளையும், அவர்களின் பெற்றோரையும் குறிப்பாக தாய்மாரையும் கையாள்வதிலும் வழிநடத்துவதிலும் பெண்கள் வலுவூட்டல் சமூகக்கழகம் எத்தகைய பங்களிப்புக்களை வழங்கியது.

கவிதா வங்கி உத்தியோகத்தராகப் பணியாற்றியமை சமூகம் சார்ந்து அவர் ஆற்றிய சேவைக்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது. வங்கிச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தருபவர்களோ அல்லது அவர்கள் மூலமாகவோ, உதவி தேவைப்படும் நிலையிலுள்ள பல பெண்கள் தனக்கு அறிமுகமானதாகக் கூறுகிறார் கவிதா.

அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த அவர், யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் பெண்களை வலுவூட்டும் நோக்கிலான கருத்தரங்குகளை நடத்தியிருந்தார். இலவச மாக நடத்தப்பட்ட இக்கருத் தரங்குகளில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டி ருந்ததுடன், அவர்களில் பலர் இது வரைகாலமும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமலும், தீர்வைக் கண்டடைய முடியாமலும் இருந்த பிரச் சினைகளைக் கவிதாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

அப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த ஆலோசனைகளை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

'யுத்தத்தின் பின்னரான இலங்கையில், குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய பெண்கள் வலுவூட்டல் செயற்திட்டத்தின் தேவையை வெகுவாக உணர்கின்றேன். 

ஏனெனில் இம்மாகாணங்களில் பெருமளவான பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் உள்ளன. அதேபோன்று முன்னரைப்போலன்றி இப்போது வட, கிழக்கு மாகாணங்களில் நுண்கடன்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், போதைப்பொருள் பயன்பாடும் வெகுவாக அதிகரித்துவருகின்றது.


எனவே பெண்களின் வாழ்வு மேம்படுவதற்காக மாத்திரமன்றி, குடும்பங்கள் சீராக வழிநடத்தப்படுவதற்கும் பெண்களை வலு வூட்டவேண்டிய அவசியமேற் பட்டுள்ளது. என்பது வெறுமனே நிதியுதவியாகவோ அல்லது ஆலோசனைகளாகவோ மாத்திரமன்றி, அவர்கள் நீண்டகாலத்தில் பயனடையக் கூடிய சுயதொழில் உதவிகள் மற்றும் உளவியல் வலுவூட்டல் அவ்வலுவூட்டல் பயிற்சிகளாக அமையவேண்டும்' என்ற தனது தூரநோக்கு சிந்தனையை பகிரும் கவிதா, தான் பிறந்த மண்ணுக்கும், அதன் மக்களுக்கும் தன்னால் இயன்றதைச்செய்யவேண்டுமென்ற தனது அவாவையும் பகிர்கிறார். 

அத்தகைய உதவிகளை இலவசமாகச் செய்வதற்கு விரும்பும் அவர், அவரையொத்த சிந்தனையுடைய, நேர்மையான தன்முனைப்பைக் கொண்டவர்களின் ஒத்துழைப்பு அதற்கு அவசியம் என்று சுட்டிக்காட்டுகிறார். 

எனவே அத்தகைய தனிநபர்களை இணைத்துக் கொண்டு, எதிர்வருங்காலங்களில் வடஇ கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களுக்கான வலுவூட்டல் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கிறார் கவிதா.

கனடாவில் இருந்து நீளும் ஈழப் பெண்ணின் உதவிக் கரம். samugammedia மிகவேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இப்பூமியில் நாமெல்லாம் நின்று, நிமிர்ந்து பார்க்க நேரமின்றி ஓடிக்கொண்டேயிருக்கிறோம். நமது வேலைப்பளு, பொறுப்புக்கள், அழுத்தங்களுக்கு மத்தியில் சக மனிதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான நேரத்தை இழந்துவிட்டோம். ஆனால் தம்மைச் சார்ந்திருக்கும் பொறுப்புக்கள் ஒருபுறமிருக்க, சக மனிதனைப் பற்றிச் சிந்திக்கின்ற, அவனது நலன் குறித்துக் கரிசனை கொள்கின்ற, அவனைக் கைகொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற அபூர்வ மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படியொருவரைத்தான் இந்தத் தொகுப்பு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றது.வங்கி உத்தியோகத்தர், பெண்கள் வலுவூட்டல் சமூகக்கழகத்தின் (Women Empowered Social Club) ஸ்தாபகர், உத்வேகப்பேச்சாளர் எனப் பல்பரிமாணங்களைக் கொண்டியங்கிவரும் திருமதி கவிதா செந்தில், இலங்கையில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்று ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்திசெய்து, திருமணம்செய்து, யுத்த காலகட்டத்தில் நாட்டு நிலைவரத்தினால் ஏற்பட்ட நிர்பந்தத்தின் காரணமாக 1988 ஆம் ஆண்டளவில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்.அங்கு சென்ற சொற்ப காலத்திலேயே தனியார் வங்கியொன்றில் இணைந்து கொண்ட அவர், அதன்பின்னர் கணக்கியல் துறையில் மீண்டும் அவரது உயர் கல்வியைத் தொடர்ந்து, அதில் பட்டம்பெற்று சுமார் 33 வருடகாலமாக வங்கித்துறை உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார்.கனடாவில் குடியேறிய ஆரம்ப காலங்கள் மற்றும் அக்காலப்பகுதியில் அவரது அனுபவங்கள் என்பன 'பெண் வலுவூட்டல்' தொடர்பான அவரது சிந்தனை யோட்டம் விரிவடைவதற்கும், அது செயல்வடிவம் பெறுவதற்கும் பெரிதும் பங்களிப்புச்செய்தன. 'நான் கனடாவுக்குச் சென்ற காலப் பகுதியில் அங்கு பெருமளவான தமிழர்கள் இருக்கவில்லை. எனவே எமக்கு வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில், நான் ஓரளவுக்குத் தெளிவாக செயற்பட்டதன் விளைவாக என்னால் அடுத்தகட்டம் நோக்கி நகரமுடிந்தது. இருப்பினும் அக்காலப்பகுதியில் என்னைப் போன்று கனடாவுக்கு வந்த அநேகமான தமிழ்ப்பெண்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கவில்லை.அவர்கள் பிரதானமாக மொழிப் பிரச்சினைக்கு முகங்கொடுத்ததுடன், இலங்கையில் யுத்த சூழ்நிலையிலிருந்து அங்கு வந்த பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தனர். எனவே பெரும்பாலான பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகள் தேவைப்பட்டன' எனச் சுட்டிக்காட்டும் கவிதா, எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு, அப்பெண்களை உளவியல் ரீதியில் வலுவூட்டும் அதேவேளை, அவர்களுக்கிடையே இடைத் தொடர்புகளைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே 'பெண்கள் வலுவூட்டல் சமூகக்கழகம்' என்ற அமைப்பை சுயமாகவே ஸ்தாபித்ததாகக் கூறுகின்றார்.அதுமாத்திரமன்றி இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இங்கிருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்த 10 - 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் பலர் உளவியல் ரீதியில் மிகுந்த தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவர்கள் பாடசாலைகளில் மிகவும் காட்டமான (வன்முறையான) முறையில் நடந்து கொண்டதாகவும், அப்பிள்ளைகளையும், அவர்களின் பெற்றோரையும் குறிப்பாக தாய்மாரையும் கையாள்வதிலும் வழிநடத்துவதிலும் பெண்கள் வலுவூட்டல் சமூகக்கழகம் எத்தகைய பங்களிப்புக்களை வழங்கியது.கவிதா வங்கி உத்தியோகத்தராகப் பணியாற்றியமை சமூகம் சார்ந்து அவர் ஆற்றிய சேவைக்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது. வங்கிச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தருபவர்களோ அல்லது அவர்கள் மூலமாகவோ, உதவி தேவைப்படும் நிலையிலுள்ள பல பெண்கள் தனக்கு அறிமுகமானதாகக் கூறுகிறார் கவிதா.அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த அவர், யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் பெண்களை வலுவூட்டும் நோக்கிலான கருத்தரங்குகளை நடத்தியிருந்தார். இலவச மாக நடத்தப்பட்ட இக்கருத் தரங்குகளில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டி ருந்ததுடன், அவர்களில் பலர் இது வரைகாலமும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமலும், தீர்வைக் கண்டடைய முடியாமலும் இருந்த பிரச் சினைகளைக் கவிதாவுடன் பகிர்ந்துகொண்டனர்.அப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த ஆலோசனைகளை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.'யுத்தத்தின் பின்னரான இலங்கையில், குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய பெண்கள் வலுவூட்டல் செயற்திட்டத்தின் தேவையை வெகுவாக உணர்கின்றேன். ஏனெனில் இம்மாகாணங்களில் பெருமளவான பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் உள்ளன. அதேபோன்று முன்னரைப்போலன்றி இப்போது வட, கிழக்கு மாகாணங்களில் நுண்கடன்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், போதைப்பொருள் பயன்பாடும் வெகுவாக அதிகரித்துவருகின்றது.எனவே பெண்களின் வாழ்வு மேம்படுவதற்காக மாத்திரமன்றி, குடும்பங்கள் சீராக வழிநடத்தப்படுவதற்கும் பெண்களை வலு வூட்டவேண்டிய அவசியமேற் பட்டுள்ளது. என்பது வெறுமனே நிதியுதவியாகவோ அல்லது ஆலோசனைகளாகவோ மாத்திரமன்றி, அவர்கள் நீண்டகாலத்தில் பயனடையக் கூடிய சுயதொழில் உதவிகள் மற்றும் உளவியல் வலுவூட்டல் அவ்வலுவூட்டல் பயிற்சிகளாக அமையவேண்டும்' என்ற தனது தூரநோக்கு சிந்தனையை பகிரும் கவிதா, தான் பிறந்த மண்ணுக்கும், அதன் மக்களுக்கும் தன்னால் இயன்றதைச்செய்யவேண்டுமென்ற தனது அவாவையும் பகிர்கிறார். அத்தகைய உதவிகளை இலவசமாகச் செய்வதற்கு விரும்பும் அவர், அவரையொத்த சிந்தனையுடைய, நேர்மையான தன்முனைப்பைக் கொண்டவர்களின் ஒத்துழைப்பு அதற்கு அவசியம் என்று சுட்டிக்காட்டுகிறார். எனவே அத்தகைய தனிநபர்களை இணைத்துக் கொண்டு, எதிர்வருங்காலங்களில் வடஇ கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களுக்கான வலுவூட்டல் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கிறார் கவிதா.

Advertisement

Advertisement

Advertisement