• Nov 25 2024

பாராளுமன்ற அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு கெஹலியவுக்கு அழைப்பு...! samugammedia

Sharmi / Feb 7th 2024, 9:30 am
image

தரமற்ற மருந்துகளை  இறக்குமதி செய்த  விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை இன்றையதினம்(7) இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதித்துள்ளார்.

ரம்புக்வெல்லவை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்குமாறு அவரது செயலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கையை அடுத்து சபாநாயகர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்லவை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன நேற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்ல விலகியுள்ளதால், அவருக்கு ஆளும் கட்சியின் பின்வரிசையில் ஆசனம் ஒன்று நாடாளுமன்றத்தில் தயார் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு கெஹலியவுக்கு அழைப்பு. samugammedia தரமற்ற மருந்துகளை  இறக்குமதி செய்த  விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை இன்றையதினம்(7) இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதித்துள்ளார்.ரம்புக்வெல்லவை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்குமாறு அவரது செயலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கையை அடுத்து சபாநாயகர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்லவை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன நேற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்ல விலகியுள்ளதால், அவருக்கு ஆளும் கட்சியின் பின்வரிசையில் ஆசனம் ஒன்று நாடாளுமன்றத்தில் தயார் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement