• Apr 01 2025

குளிர்பானத்துக்குள் மண்ணெண்ணையா? - கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.

Thansita / Mar 27th 2025, 7:54 pm
image

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் வீட்டு வேலையாட்களுக்காக சாேடா (Pநிளi) ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். 

சோடாவினை கொள்வனவு செய்த குறித்த நபரின் வீட்டு வேலையாட்கள் குறித்த சோடாவினை குடித்தபோது சோடாவில் இருந்து மண்ணெண்ணை மணம் வந்துள்ளது. 

அதனையடுத்து புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு குறித்த நபர் சோடாவுடன் நேரில் சென்று குறித்த சம்பவம் தாெடர்பாக முறைப்பாடு வழங்கியிருந்தார்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனை பரிசோதகர்கள் குறித்த விற்பனை நிலையத்தினை சோதனை செய்து கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சோடாவினை கைப்பற்றியுள்ளனர்.

மண்ணெண்ணை கலக்கப்பட்டு இருக்கின்றது என சந்தேகிக்கப்படும் சோடாவின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. 

குறித்த சோடாவினை விற்பனை செய்த விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஏனைய விற்பனை நிலையங்களிலும் சுகாதார பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குளிர்பானத்துக்குள் மண்ணெண்ணையா - கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் வீட்டு வேலையாட்களுக்காக சாேடா (Pநிளi) ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். சோடாவினை கொள்வனவு செய்த குறித்த நபரின் வீட்டு வேலையாட்கள் குறித்த சோடாவினை குடித்தபோது சோடாவில் இருந்து மண்ணெண்ணை மணம் வந்துள்ளது. அதனையடுத்து புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு குறித்த நபர் சோடாவுடன் நேரில் சென்று குறித்த சம்பவம் தாெடர்பாக முறைப்பாடு வழங்கியிருந்தார்.அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனை பரிசோதகர்கள் குறித்த விற்பனை நிலையத்தினை சோதனை செய்து கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சோடாவினை கைப்பற்றியுள்ளனர்.மண்ணெண்ணை கலக்கப்பட்டு இருக்கின்றது என சந்தேகிக்கப்படும் சோடாவின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. குறித்த சோடாவினை விற்பனை செய்த விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஏனைய விற்பனை நிலையங்களிலும் சுகாதார பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement