கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 11 ஆம் திகதி குருணாகலிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தில் 84 பேர் பயணித்திருந்த நிலையில் 23 பேர் உயிரிழந்தனர்.
இதில் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொத்மலை - கெரண்டிஎல்ல பேருந்து விபத்து: சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 11 ஆம் திகதி குருணாகலிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்தில் 84 பேர் பயணித்திருந்த நிலையில் 23 பேர் உயிரிழந்தனர். இதில் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.