• Oct 18 2024

தமிழ் மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக இடம்பெற்ற பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்!

Sharmi / Jan 27th 2023, 2:14 pm
image

Advertisement

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இன்று காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகொப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் சிறப்பாக  இடம்பெற்றது.

கும்பாபிஷேகத்தை மலைக்கோயிலில் இருந்து 6000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கண்டு கோபுரதரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை காண மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட ஆறாயிரம் பக்தர்கள் மலையில் இருந்து இறங்கியபிறகு,  வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தை காண அனுமதிச்சீட்டு கிடைக்காத பக்தர்கள் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிதரிசனம் செய்ய அதிக ஆர்வம் காட்டி மலைக்கோயிலுக்கு சென்றனர்.

கும்பாபிஷேக காட்சிகள் மலை அடிவாரம் பகுதியில் அகன்ற திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் மலைக்கோயில் மட்டுமின்றி மலையடிவாரம், கிரிவீதி,சன்னதி வீதி பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கண்காணிப்பு பணியில் டிரோன் கேமிராக்களும் ஈடுபடுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டிருந்த பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றதால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பழனியில் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

அதேவேளை பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரத்தில் 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம் முடிந்த உடன் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண காத்திருந்த பக்தர்கள் மீது 8 இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




தமிழ் மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக இடம்பெற்ற பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இன்று காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகொப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் சிறப்பாக  இடம்பெற்றது.கும்பாபிஷேகத்தை மலைக்கோயிலில் இருந்து 6000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கண்டு கோபுரதரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை காண மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட ஆறாயிரம் பக்தர்கள் மலையில் இருந்து இறங்கியபிறகு,  வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தை காண அனுமதிச்சீட்டு கிடைக்காத பக்தர்கள் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிதரிசனம் செய்ய அதிக ஆர்வம் காட்டி மலைக்கோயிலுக்கு சென்றனர்.கும்பாபிஷேக காட்சிகள் மலை அடிவாரம் பகுதியில் அகன்ற திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் மலைக்கோயில் மட்டுமின்றி மலையடிவாரம், கிரிவீதி,சன்னதி வீதி பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.கண்காணிப்பு பணியில் டிரோன் கேமிராக்களும் ஈடுபடுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டிருந்த பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றதால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பழனியில் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.அதேவேளை பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரத்தில் 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் முடிந்த உடன் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண காத்திருந்த பக்தர்கள் மீது 8 இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement