• May 19 2024

குருந்தூர் மலை காணி விவகாரம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு! samugammedia

Chithra / Jun 17th 2023, 8:33 am
image

Advertisement

முல்லைத்தீவு குறுந்தூர் மலை காணியை வேறு யாருக்கும் கொடுக்க தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் துறை நிபுணர் எல்லாவல மேதாநந்த தேரருக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

தொல்பொருள் பெறுமதிமிக்க இந்த காணியில் இந்து மற்றும் பௌத்த சின்னங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

பாரம்பரியமாக தமிழ் மக்கள் உரிமை பாராட்டி வந்த இந்த இடத்தில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, அங்குள்ள பெரும்பரப்பு காணி விகாரைக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அண்மையில் ஜனாதிபதிக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்றும் பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த காணியை வேறெவருக்கும் கொடுப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக எல்லாவலை மேதாநந்த தேரருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குருந்தூர் மலை காணி விவகாரம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு samugammedia முல்லைத்தீவு குறுந்தூர் மலை காணியை வேறு யாருக்கும் கொடுக்க தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் துறை நிபுணர் எல்லாவல மேதாநந்த தேரருக்கு உறுதிப்படுத்தியுள்ளது.தொல்பொருள் பெறுமதிமிக்க இந்த காணியில் இந்து மற்றும் பௌத்த சின்னங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.பாரம்பரியமாக தமிழ் மக்கள் உரிமை பாராட்டி வந்த இந்த இடத்தில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, அங்குள்ள பெரும்பரப்பு காணி விகாரைக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக அண்மையில் ஜனாதிபதிக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்றும் பதிவாகி இருந்தது.இந்தநிலையில் அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த காணியை வேறெவருக்கும் கொடுப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக எல்லாவலை மேதாநந்த தேரருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement