• May 08 2024

சாதாரண தர பரீட்சை அவசியமா? - விரைவில் தீர்மானம் என்கிறார் ஜனாதிபதி samugammedia

Chithra / Jun 17th 2023, 8:52 am
image

Advertisement

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து எதிர்க்காலத்தில் ஆராயப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்த, 7342 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின்போது, மேல்மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

அந்தவகையில், 1729 பேருக்கு கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 629 பேருக்கு மேல்மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், பிரதமர் தினேஸ் குணவர்த்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “20 ஆம் நூற்றாண்டு கல்வி முறைமையில் தான் நாம் இன்னமும் இருந்துக் கொண்டிருக்கிறோம்.

21 ஆம் நூற்றாண்டு கல்வி முறைமையொன்றை கொண்டுவரவே அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செயற்பட்டு வருகிறோம்.

பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமெனில், ஏற்றுமதி வர்த்தகத்தை பலப்படுத்த வேண்டும். இதற்கு முறையானதொரு கல்விக் கட்டமைப்பொன்று அவசியமாகும்.

எமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த எமக்குள்ள ஒரே பலம் மனித பலமாகும். இந்த மனித பலத்தை வலுப்படுத்துவது நாட்டின் ஆசிரியர்களின் கடமையாக இருக்கிறது.

எனவே, ஆசிரியர்களின் பற்றாக்குறையை நாம் முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.

க.பொ.த. சாதாரணத் தரப்பரீட்சை அவசியமில்லாத ஒன்று என்று சிலர் கூறுகிறார்கள். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அங்கு சாதாரணத்தரப் பரீட்சையும் கிடையாது. உயர்த்தரப் பரீட்சையும் கிடையாது.

இப்படி எமது நாட்டிலும் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சாதாரணத்தரப் பரீட்சை தொடர்பாக தீர்க்கமானதொரு முடிவொன்றை எடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

இந்தப் பரீட்சையை மாணவர்களின் தேர்ச்சி மற்றும் தோல்வியை பரீட்சித்துப் பார்க்கும் பரீட்சையாக நடத்தப் போகிறோமா அல்லது வேறு விதமாக நடத்தப்போகிறோமா என்பதை எதிர்க்காலத்தில் ஆராய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை அவசியமா - விரைவில் தீர்மானம் என்கிறார் ஜனாதிபதி samugammedia க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து எதிர்க்காலத்தில் ஆராயப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்த, 7342 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த நிகழ்வின்போது, மேல்மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.அந்தவகையில், 1729 பேருக்கு கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 629 பேருக்கு மேல்மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில், பிரதமர் தினேஸ் குணவர்த்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “20 ஆம் நூற்றாண்டு கல்வி முறைமையில் தான் நாம் இன்னமும் இருந்துக் கொண்டிருக்கிறோம்.21 ஆம் நூற்றாண்டு கல்வி முறைமையொன்றை கொண்டுவரவே அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செயற்பட்டு வருகிறோம்.பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமெனில், ஏற்றுமதி வர்த்தகத்தை பலப்படுத்த வேண்டும். இதற்கு முறையானதொரு கல்விக் கட்டமைப்பொன்று அவசியமாகும்.எமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த எமக்குள்ள ஒரே பலம் மனித பலமாகும். இந்த மனித பலத்தை வலுப்படுத்துவது நாட்டின் ஆசிரியர்களின் கடமையாக இருக்கிறது.எனவே, ஆசிரியர்களின் பற்றாக்குறையை நாம் முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.க.பொ.த. சாதாரணத் தரப்பரீட்சை அவசியமில்லாத ஒன்று என்று சிலர் கூறுகிறார்கள். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அங்கு சாதாரணத்தரப் பரீட்சையும் கிடையாது. உயர்த்தரப் பரீட்சையும் கிடையாது.இப்படி எமது நாட்டிலும் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சாதாரணத்தரப் பரீட்சை தொடர்பாக தீர்க்கமானதொரு முடிவொன்றை எடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.இந்தப் பரீட்சையை மாணவர்களின் தேர்ச்சி மற்றும் தோல்வியை பரீட்சித்துப் பார்க்கும் பரீட்சையாக நடத்தப் போகிறோமா அல்லது வேறு விதமாக நடத்தப்போகிறோமா என்பதை எதிர்க்காலத்தில் ஆராய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement