• Sep 17 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- ஐரோப்பிய ஒன்றியம்!samugammedia

Sharmi / Apr 10th 2023, 4:35 pm
image

Advertisement

இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய முடிவிற்கு முன்னதாகவே இந்த புதிய மாற்றுச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தை ஏற்காது ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் மூலம் பொது மக்களது தகவல்களின் அடிப்படையிலான செயல்முறையால் முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் இலங்கையில், இந்த செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது என்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவர் டெனில் சைபி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- ஐரோப்பிய ஒன்றியம்samugammedia இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய முடிவிற்கு முன்னதாகவே இந்த புதிய மாற்றுச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டத்தை ஏற்காது ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் மூலம் பொது மக்களது தகவல்களின் அடிப்படையிலான செயல்முறையால் முன்னெடுக்கப்படுகிறது.எனினும் இலங்கையில், இந்த செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது என்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவர் டெனில் சைபி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement