• May 19 2024

தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக்கியவர் லக்ஸ்மன் கதிர்காமர்: சபையில் முழங்கிய அலி சப்ரி.!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 11:03 am
image

Advertisement

தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக ஆக்குவதற்கு முன்நின்று செயற்பட்டவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டுமானால் சில விடயங்களை பகிரங்கமாக தர்க்கிக்க முடியாது என்றும் இறையாண்மை என்பது வெறும் வாய்வார்த்தை இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைகின்ற போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் பாரிய செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும்
தமிழீழ விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக தடை செய்வதற்கான அனைத்து விடயங்களை தலைமை வகித்து அவர் செய்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று நிராயுதபாணியாக மாறுவதற்கு லக்ஸ்மன் கதிர்காமரின் அன்றைய செயற்பாடுகளே காரணம் என்றும் அலி சப்ரி சுட்டிக்காட்டுகின்றார்.
அத்துடன் விடுதலைப்புலிகள் நிதி வசூலிக்கின்ற நிலையையும் லக்ஸ்மன் கதிர்காமர் இல்லாது ஒழித்திருந்தாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்பு நாடுகளின் உறவுகளை பேணியதாலேயே இந்த விடயங்கள் சாத்தியமானதாகவும் யுத்தததின் இறுதி நேரத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 9 கப்பல்களை இலங்கை இராணுவம் அழித்திருந்தாகவும் இதனை சாத்தியமாக்க அமெரிக்கா  உதவி செய்திருந்தாக அலி சப்ரி குறிப்பிட்டார்.

அமெரிக்காவிடமிருந்து சரியான நேரத்தில் கிடைத்தை புலனாய்வுத் தகவல் மூலம் இலங்கை இராணுவத்தால் அதனை முற்றாக அழிக்க முடிந்ததாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாடுகளுடன் பகைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து நட்புறவுடன் செயற்படவேண்டும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக்கியவர் லக்ஸ்மன் கதிர்காமர்: சபையில் முழங்கிய அலி சப்ரி.SamugamMedia தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக ஆக்குவதற்கு முன்நின்று செயற்பட்டவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.இதில் உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டுமானால் சில விடயங்களை பகிரங்கமாக தர்க்கிக்க முடியாது என்றும் இறையாண்மை என்பது வெறும் வாய்வார்த்தை இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைகின்ற போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் பாரிய செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும்தமிழீழ விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக தடை செய்வதற்கான அனைத்து விடயங்களை தலைமை வகித்து அவர் செய்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று நிராயுதபாணியாக மாறுவதற்கு லக்ஸ்மன் கதிர்காமரின் அன்றைய செயற்பாடுகளே காரணம் என்றும் அலி சப்ரி சுட்டிக்காட்டுகின்றார்.அத்துடன் விடுதலைப்புலிகள் நிதி வசூலிக்கின்ற நிலையையும் லக்ஸ்மன் கதிர்காமர் இல்லாது ஒழித்திருந்தாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நட்பு நாடுகளின் உறவுகளை பேணியதாலேயே இந்த விடயங்கள் சாத்தியமானதாகவும் யுத்தததின் இறுதி நேரத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 9 கப்பல்களை இலங்கை இராணுவம் அழித்திருந்தாகவும் இதனை சாத்தியமாக்க அமெரிக்கா  உதவி செய்திருந்தாக அலி சப்ரி குறிப்பிட்டார்.அமெரிக்காவிடமிருந்து சரியான நேரத்தில் கிடைத்தை புலனாய்வுத் தகவல் மூலம் இலங்கை இராணுவத்தால் அதனை முற்றாக அழிக்க முடிந்ததாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.எனவே சர்வதேச நாடுகளுடன் பகைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து நட்புறவுடன் செயற்படவேண்டும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement