• Nov 24 2024

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரை வழிப்பாதை! யாழில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு samugammedia

Chithra / Dec 1st 2023, 10:03 am
image



தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

வடக்கை இணைத்து இந்தியா, இலங்கைக்கு இடையிலான எரிபொருள் குழாய் செயற்றிட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்றும் கோபால் பாக்லே கூறியுள்ளார்.

மேலும் அரசியல் தீர்வு விடயத்தில் கரிசனைகளைக் கொண்டுள்ள இந்தியா, 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் போதுநெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத்தருமாறும் பிரதேச செயலாளர் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பான திட்ட வரைபினை தயாரித்து வழங்குமாறும் , அதனடிப்படையில் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இந்திய தூதுவர் வாக்குறுதியளித்தார்.

இம்மாதத்துடன் இந்திய உயர்ஸ்தானிகராக இலங்கையில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யவுள்ள கோபால் பாக்லே வடக்கிற்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரை வழிப்பாதை யாழில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு samugammedia தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.வடக்கை இணைத்து இந்தியா, இலங்கைக்கு இடையிலான எரிபொருள் குழாய் செயற்றிட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்றும் கோபால் பாக்லே கூறியுள்ளார்.மேலும் அரசியல் தீர்வு விடயத்தில் கரிசனைகளைக் கொண்டுள்ள இந்தியா, 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.இதேவேளை நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.இதன் போதுநெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத்தருமாறும் பிரதேச செயலாளர் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.இது தொடர்பான திட்ட வரைபினை தயாரித்து வழங்குமாறும் , அதனடிப்படையில் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இந்திய தூதுவர் வாக்குறுதியளித்தார்.இம்மாதத்துடன் இந்திய உயர்ஸ்தானிகராக இலங்கையில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யவுள்ள கோபால் பாக்லே வடக்கிற்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement