ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த வழக்கின் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் அறிவித்தார்.
முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்ஐ திஸ்ஸசிறி சுகதபால, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமா அதிபர் ரணசிங்க பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டார் என உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், 2009 ஜனவரி 9 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான உத்தரவு தொடர்பில் வெளிப்படைத்தன்மையை கோருவதுடன் சட்டமா அதிபரை பதவி விலகுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லசந்த படுகொலைச் சம்பவம்; சர்ச்சையை எழுப்பிய சந்தேக நபர்களை விடுவிக்கும் தீர்மானம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.குறித்த வழக்கின் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் அறிவித்தார்.முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்ஐ திஸ்ஸசிறி சுகதபால, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சட்டமா அதிபர் ரணசிங்க பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டார் என உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், 2009 ஜனவரி 9 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான உத்தரவு தொடர்பில் வெளிப்படைத்தன்மையை கோருவதுடன் சட்டமா அதிபரை பதவி விலகுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.