• Nov 22 2024

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Chithra / Oct 14th 2024, 8:32 am
image

 

ஜனாதிபதி  தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் செலவழித்த செலவு அறிக்கையை கையளிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவழித்த செலவு பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு வழங்கப்பட்ட காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில் இதுவரை இந்த செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவழிக்க முடியுமான ஆகக்கூடுதலான தொகை 109 ரூபா என நிர்ணயித்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட்டிருந்தது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 21 நாட்களில் குறித்த செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்க வேண்டும். அதன் பிரகாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த கால எல்லை முடிவடைந்துள்ளது.

என்றாலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 38 பேரில் 20 பேரே இந்த செலவு அறிக்கையை கையளித்திருப்பதாகவும் அதில் பிரதான வேட்பாளர்கள் யாரும் நேற்று நண்பகல்வரை கையளிக்கவில்லை எனவும் எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

என்றாலும் நேற்றைய தினத்துக்குள் அவர்கள் அனைவரும் அந்த அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளித்திருப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

அவர்கள் அந்த அறிக்கையை கையளிக்காவிட்டால், சட்டத்துக்கு முன் அவர்கள் தவறிழைத்தவர்களாக ஆவார்கள்.

எனவே நேற்றைய தினத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றார். 

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  ஜனாதிபதி  தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் செலவழித்த செலவு அறிக்கையை கையளிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவழித்த செலவு பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு வழங்கப்பட்ட காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவழிக்க முடியுமான ஆகக்கூடுதலான தொகை 109 ரூபா என நிர்ணயித்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட்டிருந்தது.அத்துடன் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 21 நாட்களில் குறித்த செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்க வேண்டும். அதன் பிரகாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த கால எல்லை முடிவடைந்துள்ளது.என்றாலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 38 பேரில் 20 பேரே இந்த செலவு அறிக்கையை கையளித்திருப்பதாகவும் அதில் பிரதான வேட்பாளர்கள் யாரும் நேற்று நண்பகல்வரை கையளிக்கவில்லை எனவும் எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.என்றாலும் நேற்றைய தினத்துக்குள் அவர்கள் அனைவரும் அந்த அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளித்திருப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்.அவர்கள் அந்த அறிக்கையை கையளிக்காவிட்டால், சட்டத்துக்கு முன் அவர்கள் தவறிழைத்தவர்களாக ஆவார்கள்.எனவே நேற்றைய தினத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement