• Nov 23 2024

கெஹலியவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்..!

Chithra / Jan 23rd 2024, 3:45 pm
image

 

கெஹலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சிப் பதவியில் இருந்து நீக்கி சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடிதத்தினை மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினர் இணைந்து ஜனாதிபதி செயலாளரிடம்  கையளித்துள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சரை தற்போதும் அமைச்சரவையில் தக்க வைத்திருப்பதானது, மக்களின் நம்பிக்கையை மீறும் செயலாகும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமற்ற இம்னோகுளோபுலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சராக செயற்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கெஹலியவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்.  கெஹலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சிப் பதவியில் இருந்து நீக்கி சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த கடிதத்தினை மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினர் இணைந்து ஜனாதிபதி செயலாளரிடம்  கையளித்துள்ளனர்.முன்னாள் சுகாதார அமைச்சரை தற்போதும் அமைச்சரவையில் தக்க வைத்திருப்பதானது, மக்களின் நம்பிக்கையை மீறும் செயலாகும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தரமற்ற இம்னோகுளோபுலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சராக செயற்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement