• Jan 11 2025

யாழில் சுண்ணக்கல் அகழ்வு; அதிகாரிகள் அசமந்த போக்கு- சந்திரசேகர் குற்றச்சாட்டு..!

Sharmi / Jan 6th 2025, 8:57 am
image

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை நேற்றையதினம்(05) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றி சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். 

இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நீங்கள் செய்தது தவறு, குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன்.

ஆனால் தற்போது பார்க்கும் பொழுது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்று தோன்றுகிறது. இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வெட்ட வெட்ட பூதம் கிளம்பியது போல இன்று பல பிரச்சினைகள் வெளிவருகின்றன.

சரசாலை பகுதியில் சட்டரீதியான வேலைகள், சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன. 

தனியார் காணிகளில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன, அதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதற்கு அருகாமையில் அரச காணிகள் உள்ளன அதில் அனுமதி பெறப்படாமல் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. 

இவற்றையெல்லாம் பார்க்கும் வேளையில் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது.

இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த தொழிலை புரிகின்ற வியாபாரிகளோ, தொழில்புரிகின்ற ஊழியர்களோ அல்ல. மாவட்ட செயலாளர், பிரதேச செயலர், கிராம சேவகர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். 

அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அத்துடன் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் விளைகிறேன்.

சரசாலையில் உள்ள சுண்ணக்கல்லுக்கும் இளங்குமரன் எம்.பி மறித்த லொறியில் இருந்த சுண்ணக்கல்லுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது. அப்படியாயின் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இந்த திருட்டுத் தொழில் இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுகின்றது.

ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான அகழ்வுகள் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு பல பரம்பரைகள் பலியாகும் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடக்கூடாது.

ஒரு சில வியாபாரிகளின் பணப் பசியை போக்கும் தேவைக்காக இந்த செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசாங்கத்தில் இது தடுத்து நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழில் சுண்ணக்கல் அகழ்வு; அதிகாரிகள் அசமந்த போக்கு- சந்திரசேகர் குற்றச்சாட்டு. யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை நேற்றையதினம்(05) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றி சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நீங்கள் செய்தது தவறு, குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன்.ஆனால் தற்போது பார்க்கும் பொழுது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்று தோன்றுகிறது. இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வெட்ட வெட்ட பூதம் கிளம்பியது போல இன்று பல பிரச்சினைகள் வெளிவருகின்றன.சரசாலை பகுதியில் சட்டரீதியான வேலைகள், சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன. தனியார் காணிகளில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன, அதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அருகாமையில் அரச காணிகள் உள்ளன அதில் அனுமதி பெறப்படாமல் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் வேளையில் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது.இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த தொழிலை புரிகின்ற வியாபாரிகளோ, தொழில்புரிகின்ற ஊழியர்களோ அல்ல. மாவட்ட செயலாளர், பிரதேச செயலர், கிராம சேவகர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அத்துடன் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் விளைகிறேன்.சரசாலையில் உள்ள சுண்ணக்கல்லுக்கும் இளங்குமரன் எம்.பி மறித்த லொறியில் இருந்த சுண்ணக்கல்லுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது. அப்படியாயின் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இந்த திருட்டுத் தொழில் இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுகின்றது.ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான அகழ்வுகள் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு பல பரம்பரைகள் பலியாகும் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடக்கூடாது.ஒரு சில வியாபாரிகளின் பணப் பசியை போக்கும் தேவைக்காக இந்த செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசாங்கத்தில் இது தடுத்து நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement