• Nov 26 2024

ஐந்து உயிர்களை காவுவாங்கிய ​​கடலில் மிதந்த திரவம்; உயிருடன் இலங்கை திரும்பிய மீனவர்..!

Chithra / Jul 1st 2024, 2:49 pm
image

 

Devon 5  மீன்பிடிக் கப்பலில் விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்த மீனவர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் இந்த  மீன்பிடிக் கப்பல் சென்றது.

இவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ​​கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்டு, 6 மீனவர்களில் 5 பேர் அதே கப்பலில் இறந்தனர்.

கப்பலின் தலைவர் 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 மீனவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

ஐந்து உயிர்களை காவுவாங்கிய ​​கடலில் மிதந்த திரவம்; உயிருடன் இலங்கை திரும்பிய மீனவர்.  Devon 5  மீன்பிடிக் கப்பலில் விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்த மீனவர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் இந்த  மீன்பிடிக் கப்பல் சென்றது.இவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ​​கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்டு, 6 மீனவர்களில் 5 பேர் அதே கப்பலில் இறந்தனர்.கப்பலின் தலைவர் 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 மீனவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

Advertisement

Advertisement

Advertisement