• Nov 24 2024

மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களுக்கு சிக்கல்..! வெளிவரப்போகும் பட்டியல்

Chithra / Sep 26th 2024, 10:59 am
image

 

மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் போன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர். அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. 

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும். 

அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களுக்கு சிக்கல். வெளிவரப்போகும் பட்டியல்  மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் போன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர். அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement