• Mar 20 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

Sharmi / Mar 20th 2025, 8:53 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான காலஎல்லை இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

வேட்புமனுக்களை தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க முடியும்.

வேட்புமனுக்களை ஏற்கும் பணி கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருந்தது.

இதேசமயம், தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் நேற்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு. எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான காலஎல்லை இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.வேட்புமனுக்களை தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க முடியும்.வேட்புமனுக்களை ஏற்கும் பணி கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருந்தது.இதேசமயம், தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் நேற்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement