• Mar 20 2025

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

Chithra / Mar 20th 2025, 8:55 am
image


2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 

திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலைகளின் அதிபர்களுக்கு உரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டுள்ளது. 

அவ்விண்ணப்பப் படிவத்தைத் தரம் 05 இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடமிருந்து பெற்று பெற்றோர் அதனை முறையாக பூரணப்படுத்த வேண்டும். 

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அதிபரிடம் மீண்டும் கையளிக்க வேண்டும் என்பதுடன், அதிபர் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிகழ்நிலை முறையில் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அதிபர்களுக்கு உரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டுள்ளது. அவ்விண்ணப்பப் படிவத்தைத் தரம் 05 இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடமிருந்து பெற்று பெற்றோர் அதனை முறையாக பூரணப்படுத்த வேண்டும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அதிபரிடம் மீண்டும் கையளிக்க வேண்டும் என்பதுடன், அதிபர் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிகழ்நிலை முறையில் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement