பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மது போதையில் தனது நண்பர்களுடன் குழுவாக வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த 2021 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.
சிறைக்குள் ஆயுதங்களை கொண்டு சென்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சராக அன்றிருந்த சரத் வீரசேகர கூறியிருந்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லொஹான் ரத்வத்தவிற்கு புதிய அமைச்சு பதவி. பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.மது போதையில் தனது நண்பர்களுடன் குழுவாக வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றம் சுமத்தப்பட்டது.கடந்த 2021 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.சிறைக்குள் ஆயுதங்களை கொண்டு சென்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சராக அன்றிருந்த சரத் வீரசேகர கூறியிருந்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.