• May 17 2024

ரோலக்ஸ் கேரக்டரை முழு நீள படமாக்கும் லோகேஷ்!!

crownson / Dec 15th 2022, 7:49 am
image

Advertisement

விஜய்யின் 67-வது படத்திற்காக லோகேஷ் கனகராஜ் மீண்டும் அவருடன் இணைந்ததால் தினமும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

அவரை பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் தளபதி 67 சம்பந்தப்பட்ட கேள்விகளை முன் வைக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.

சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில், தனது படங்களை வரிசைப்படுத்தினார் லோகேஷ்.

அவர் அடுத்ததாக 'தளபதி 67' படத்தைத் தொடர்ந்து 'கைதி 2', 'விக்ரம் 2' மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் முழு நீளப் படம் என பட்டியலிட்டார்.

இருப்பினும், அந்தந்த நடிகர்களின் நேரத்தைப் பொறுத்து இந்த வரிசை மாற்றப்படலாம்.

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர்.

அவர் மீண்டும் விஜய்யுடன் இணையும் 'தளபதி 67' ஒரு பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக ப்ரோமோ வீடியோவை சமீபத்தில் படமாக்கினர் படக்குழு.

தளபதி 67 படத்தில் சஞ்சய் தத்இ அர்ஜுன், கௌதம் மேனன், நிவின் பாலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும், த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் 'வாரிசு' வெளியீட்டிற்குப் பிறகு இது குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் விக்ரம் படத்தின் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் இழுத்த ரோலக்ஸ் கேரக்டர் முழு படமாக வருவது ரசிகர்கள் மனதில் கொண்டாடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோலக்ஸ் கேரக்டரை முழு நீள படமாக்கும் லோகேஷ் விஜய்யின் 67-வது படத்திற்காக லோகேஷ் கனகராஜ் மீண்டும் அவருடன் இணைந்ததால் தினமும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார். அவரை பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் தளபதி 67 சம்பந்தப்பட்ட கேள்விகளை முன் வைக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில், தனது படங்களை வரிசைப்படுத்தினார் லோகேஷ். அவர் அடுத்ததாக 'தளபதி 67' படத்தைத் தொடர்ந்து 'கைதி 2', 'விக்ரம் 2' மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் முழு நீளப் படம் என பட்டியலிட்டார். இருப்பினும், அந்தந்த நடிகர்களின் நேரத்தைப் பொறுத்து இந்த வரிசை மாற்றப்படலாம்.லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர். அவர் மீண்டும் விஜய்யுடன் இணையும் 'தளபதி 67' ஒரு பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக ப்ரோமோ வீடியோவை சமீபத்தில் படமாக்கினர் படக்குழு.தளபதி 67 படத்தில் சஞ்சய் தத்இ அர்ஜுன், கௌதம் மேனன், நிவின் பாலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும், த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் 'வாரிசு' வெளியீட்டிற்குப் பிறகு இது குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிகிறது.மேலும் விக்ரம் படத்தின் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் இழுத்த ரோலக்ஸ் கேரக்டர் முழு படமாக வருவது ரசிகர்கள் மனதில் கொண்டாடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement