• May 02 2024

90 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றை மாற்றி அமைத்த ஷ்ரேயஸ் ஐயர்!!

crownson / Dec 15th 2022, 8:14 am
image

Advertisement

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தின் சாட்டாகிராமில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் 22 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னிலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 46 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் – புஜாரா ஜோடி, மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

வழக்கம் போல் புஜாரா பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய 203 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த போது தய்ஜுல் இஸ்லாமின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து, வெறும் 10 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதன்பின் களமிறங்கிய ஆல் ரவுண்டர்கள் அக்‌ஷர் பட்டேல் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 169 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம், போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 278 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம், இந்திய அணியின் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார்.

அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41 என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில்  குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.

இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.


90 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றை மாற்றி அமைத்த ஷ்ரேயஸ் ஐயர் வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தின் சாட்டாகிராமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் 22 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர்.நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னிலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 46 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதன்பின் கூட்டணி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் – புஜாரா ஜோடி, மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. வழக்கம் போல் புஜாரா பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய 203 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த போது தய்ஜுல் இஸ்லாமின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து, வெறும் 10 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.இதன்பின் களமிறங்கிய ஆல் ரவுண்டர்கள் அக்‌ஷர் பட்டேல் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 169 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம், போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 278 ரன்கள் எடுத்துள்ளது.இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம், இந்திய அணியின் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41 என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில்  குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement