• Sep 17 2024

நெடுந்தீவு கூட்டுப்படுகொலை...! பொலிஸார் தூதரகத்துக்கு கடிதம்....!samugammedia

Sharmi / May 1st 2023, 7:45 am
image

Advertisement

யாழ் நெடுந்தீவில் கடந்த 22ம் திகதி அதிகாலை இடம்பெற்ற கூட்டுப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 53 வயதுடைய இரட்டைப் பிரஜை இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவரது மனைவி ஜேர்மன் நாட்டவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளின் ஒரு பகுதியாக சந்தேகநபரின் சமீபத்திய இருப்பிடத்தை சரிபார்க்க பொலிசார் சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில் சந்தேகநபர் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

70 வயதுக்கு மேற்பட்ட நான்கு பெண்களும், இரு ஆண்களும் கூரிய பொருளால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் தங்க நகைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வசமிருந்த தங்கத்துடன் பொலிசார் கத்தியையும் மீட்டுள்ளனர்.தாக்குதலில் உயிர் பிழைத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 100 வயதான பெண்ணும் உயிரிழந்தார்.
அவர்களின் இறுதி சடங்குகள் நேற்றும் நேற்று முன் தினமும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கூட்டுப்படுகொலை. பொலிஸார் தூதரகத்துக்கு கடிதம்.samugammedia யாழ் நெடுந்தீவில் கடந்த 22ம் திகதி அதிகாலை இடம்பெற்ற கூட்டுப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 53 வயதுடைய இரட்டைப் பிரஜை இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவரது மனைவி ஜேர்மன் நாட்டவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.மேலதிக விசாரணைகளின் ஒரு பகுதியாக சந்தேகநபரின் சமீபத்திய இருப்பிடத்தை சரிபார்க்க பொலிசார் சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.இந்நிலையில் சந்தேகநபர் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.70 வயதுக்கு மேற்பட்ட நான்கு பெண்களும், இரு ஆண்களும் கூரிய பொருளால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் தங்க நகைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் வசமிருந்த தங்கத்துடன் பொலிசார் கத்தியையும் மீட்டுள்ளனர்.தாக்குதலில் உயிர் பிழைத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 100 வயதான பெண்ணும் உயிரிழந்தார்.அவர்களின் இறுதி சடங்குகள் நேற்றும் நேற்று முன் தினமும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement