• Apr 05 2025

யாழில் லொறி சாரதியின் செயல்; ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் பாதிப்பு

Chithra / Apr 4th 2025, 8:20 pm
image


யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது 

இன்று(4) காலை 07.00 மணியளவில் மருதங்கேணி தெற்கு பகுதியூடாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றும் பேருந்தானது பயணித்தது.

மருதங்கேணி பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மாடி வீட்டிற்கு ஓடுகளை இறக்குவதற்காக லொறி ஒன்று வீதியை மறித்து நிறுத்தப்பட்டது. 

இதனால் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்கள் குறித்த பகுதியால் பயணிக்க முடியாத சூழ் நிலை உருவானது.

உடனடியாக லொறியை அப்புறப்படுத்துமாறு சாரதிக்கு கூறிய போதும் அவர் அதனை அகற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் 

இதனால் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்ற முடியாமல் பேருந்தானது மாற்று வழியால் திரும்பிச் சென்றதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

தூர பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர்  குறித்த லொறி சாரதியின் நடவடிக்கையால் பேருந்து இன்றி பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழில் லொறி சாரதியின் செயல்; ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் பாதிப்பு யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது இன்று(4) காலை 07.00 மணியளவில் மருதங்கேணி தெற்கு பகுதியூடாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றும் பேருந்தானது பயணித்தது.மருதங்கேணி பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மாடி வீட்டிற்கு ஓடுகளை இறக்குவதற்காக லொறி ஒன்று வீதியை மறித்து நிறுத்தப்பட்டது. இதனால் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்கள் குறித்த பகுதியால் பயணிக்க முடியாத சூழ் நிலை உருவானது.உடனடியாக லொறியை அப்புறப்படுத்துமாறு சாரதிக்கு கூறிய போதும் அவர் அதனை அகற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இதனால் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்ற முடியாமல் பேருந்தானது மாற்று வழியால் திரும்பிச் சென்றதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.தூர பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர்  குறித்த லொறி சாரதியின் நடவடிக்கையால் பேருந்து இன்றி பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement