• Apr 28 2024

எல்லை தாண்டி மலர்ந்த காதல்..! மடக்கி பிடித்த பொலிஸார்..! samugammedia

Chithra / Jul 4th 2023, 2:02 pm
image

Advertisement

எல்லை தாண்டி மலர்ந்த காதல் இறுதியில் கைதில் முடிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 27 வயதான பெண்ணொருவர் கணவர், துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். 

குறித்த பெண், ஆன்லைனில் பப்ஜி விளையாடும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தமையால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் என்ற 22 வயது இளைஞனுடன் பப்ஜி விளையாடி வந்துள்ளார். 

இந்நிலையில், இருவருக்கும் இடையில் உண்டான பழக்கம் காதலாக மாறியதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதையடுத்து, சச்சினை திருமணம் செய்யும் ஆசையில் அந்தப் பெண், தனது 4  குழந்தைகளுடன் விமானம் மூலம் நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். 

அதன் பின்னர், நொய்டாவில் ஒரு மாதத்திற்கும் அதிகமாக சச்சினுடன் ஒன்றாகத் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். 

அதனை தொடர்ந்து, காதல் ஜோடி  திருமணம் செய்து கொள்வதற்காக வழக்கறிஞர் ஒருவரிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளனர்.

அந்த விடயத்தினை வழக்கறிஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள நிலையில்,குறித்த பெண்ணுடன், சச்சினையும் மற்றும் இருவருக்கும் வாடகைக்கு வீடு கொடுத்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலும், குறித்த அந்த பெண்ணின் அண்ணன் பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

எல்லை தாண்டி மலர்ந்த காதல். மடக்கி பிடித்த பொலிஸார். samugammedia எல்லை தாண்டி மலர்ந்த காதல் இறுதியில் கைதில் முடிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் 27 வயதான பெண்ணொருவர் கணவர், துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். குறித்த பெண், ஆன்லைனில் பப்ஜி விளையாடும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தமையால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் என்ற 22 வயது இளைஞனுடன் பப்ஜி விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் உண்டான பழக்கம் காதலாக மாறியதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சச்சினை திருமணம் செய்யும் ஆசையில் அந்தப் பெண், தனது 4  குழந்தைகளுடன் விமானம் மூலம் நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். அதன் பின்னர், நொய்டாவில் ஒரு மாதத்திற்கும் அதிகமாக சச்சினுடன் ஒன்றாகத் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து, காதல் ஜோடி  திருமணம் செய்து கொள்வதற்காக வழக்கறிஞர் ஒருவரிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளனர்.அந்த விடயத்தினை வழக்கறிஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள நிலையில்,குறித்த பெண்ணுடன், சச்சினையும் மற்றும் இருவருக்கும் வாடகைக்கு வீடு கொடுத்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குறித்த அந்த பெண்ணின் அண்ணன் பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement