வேறு சாதியில் காதல் திருமணம் செய்ய நினைத்த மகளை தந்தையே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,
பீகார் மாநிலம், முசாபர்பூரை சேர்ந்தவர் அம்ரிதா . இவர் வேறு சாதியைச் சேர்ந்த சுபம் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.
இந்த காதலுக்கு அம்ரிதாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்களைப் பிரிப்பதற்காக அம்ரிதாவை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சுபமும் அம்ரிதாவும் தொலைபேசியில் பேசி காதலை வளர்த்துள்ளனர். மேலும் ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளவும் முயற்சி செய்து வருவதாகவும் அம்ரிதாவின் தந்தை சந்தேகமடைந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லி கன்சாவாலாவில் சந்த்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் அம்ரிதா கிடந்தார்.
குறிப்பாக இதைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறை அம்ரிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அம்ரிதாவின் கழுத்து மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்துள்ளதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். இக் கொலையை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சந்த்பூர் பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது , ஒரு காரில் அம்ரிதாவை அவரது தந்தை அழைத்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த வாகனத்தின் எண்ணை வைத்து ஓட்டுநரை பிடித்து விசாரித்த போது ஒரு இளம்பெண் உள்பட இருவரை இறக்கி விட்டு வந்ததாக கூறினார்.
மேலும் அம்ரிதாவின் தந்தை மீது சந்தேகமடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் பேப்பர் வெட்டும் கட்டரால் தனது மகள் அம்ரிதாவின் கழுத்தை அறுத்து அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ரிதாவின் தந்தையை கைது செய்தனர்.
வேறு சாதியில் காதலா மகளின் கழுத்தை அறுத்த தந்தை- பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் வேறு சாதியில் காதல் திருமணம் செய்ய நினைத்த மகளை தந்தையே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,பீகார் மாநிலம், முசாபர்பூரை சேர்ந்தவர் அம்ரிதா . இவர் வேறு சாதியைச் சேர்ந்த சுபம் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அம்ரிதாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்களைப் பிரிப்பதற்காக அம்ரிதாவை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சுபமும் அம்ரிதாவும் தொலைபேசியில் பேசி காதலை வளர்த்துள்ளனர். மேலும் ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளவும் முயற்சி செய்து வருவதாகவும் அம்ரிதாவின் தந்தை சந்தேகமடைந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லி கன்சாவாலாவில் சந்த்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் அம்ரிதா கிடந்தார். குறிப்பாக இதைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறை அம்ரிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அம்ரிதாவின் கழுத்து மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்துள்ளதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். இக் கொலையை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.சந்த்பூர் பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது , ஒரு காரில் அம்ரிதாவை அவரது தந்தை அழைத்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த வாகனத்தின் எண்ணை வைத்து ஓட்டுநரை பிடித்து விசாரித்த போது ஒரு இளம்பெண் உள்பட இருவரை இறக்கி விட்டு வந்ததாக கூறினார்.மேலும் அம்ரிதாவின் தந்தை மீது சந்தேகமடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் பேப்பர் வெட்டும் கட்டரால் தனது மகள் அம்ரிதாவின் கழுத்தை அறுத்து அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ரிதாவின் தந்தையை கைது செய்தனர்.