• May 02 2024

தாய்லாந்தின் குரங்கால் இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்!SamugamMedia

Sharmi / Mar 9th 2023, 11:50 am
image

Advertisement

தாய்லாந்தில் தேங்காய் பறிக்க மனிதாபிமானமற்ற முறையில் குரங்குகள் துன்புறுத்தப்படுகின்றன’ என்ற பீட்டாவின் குற்றச்சாட்டால் சில மேற்கத்திய நிறுவனங்கள் தாய்லாந்து நாட்டின் தேங்காய் தயாரிப்புப் பொருள்களைப் புறக்கணிக்கத் தொடங்கி உள்ளன. இந்தநிலைமை இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

“காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் குரங்குகள் பிடித்துவரப்பட்டு கட்டாயமாக ஒரு நாளைக்கு 1000- க்கும் மேற்பட்ட தேங்காய்களைப் பறிக்கக் கட்டாயப்படுத்தப் படுகின்றன. தாய்லாந்தில் குரங்குகள் தேங்காய் பறிக்கும் இயந்திரமாகப் பார்க்கப்படுகிறது” எனும் பீட்டாவின் குற்றச்சாட்டு மேற்கத்திய – தாய்லாந்து வணிகத்தில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.


பீட்டாவின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து 15,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் குரங்குகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் தாய்லாந்திலிருந்து தேங்காய் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய்ப்பாலின் சாத்தியமான மூலச் சந்தைகளின் பட்டியலில் உள்ள இலங்கைக்கு, இது தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதியைத் தூண்டுவதற்கான மேம்பட்ட வாய்ப்பைக் கொண்டு வருகிறது. பெரும்பாலும் தாய்லாந்தின் ஆதிக்கத்தில் இருக்கும் அமெரிக்க சந்தையை இலங்கை ஆக்கிரமிப்பதற்கு இது வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

தாய்லாந்து அமெரிக்காவில் தேங்காய் பால் சந்தைப் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் 2020 இல் கிட்டத்தட்ட 78,000 தொன்களை ஏற்றுமதி செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் இலங்கை 52,765 மெட்ரிக் தொன் தேங்காய்ப்பாலை ஏற்றுமதி செய்து, ரூ.29,012 மில்லியன் வருமானத்தை ஈட்டியது. 2023 ஜனவரி இல், 4,421 MT தேங்காய் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு, ரூ.2,491 மில்லியன் பெறப்பட்டுள்ளது .


இதேவேளை பீட்டாவின் குற்றச்சாட்டை  தாய்லாந்து  நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் ஜூரின் லக்சனாவிசிட், “பீட்டாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டானது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தைப் பாதித்திருக்கிறது.

குரங்குகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மாறாக, தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் குரங்கால் இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்SamugamMedia தாய்லாந்தில் தேங்காய் பறிக்க மனிதாபிமானமற்ற முறையில் குரங்குகள் துன்புறுத்தப்படுகின்றன’ என்ற பீட்டாவின் குற்றச்சாட்டால் சில மேற்கத்திய நிறுவனங்கள் தாய்லாந்து நாட்டின் தேங்காய் தயாரிப்புப் பொருள்களைப் புறக்கணிக்கத் தொடங்கி உள்ளன. இந்தநிலைமை இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.“காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் குரங்குகள் பிடித்துவரப்பட்டு கட்டாயமாக ஒரு நாளைக்கு 1000- க்கும் மேற்பட்ட தேங்காய்களைப் பறிக்கக் கட்டாயப்படுத்தப் படுகின்றன. தாய்லாந்தில் குரங்குகள் தேங்காய் பறிக்கும் இயந்திரமாகப் பார்க்கப்படுகிறது” எனும் பீட்டாவின் குற்றச்சாட்டு மேற்கத்திய – தாய்லாந்து வணிகத்தில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.பீட்டாவின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து 15,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் குரங்குகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் தாய்லாந்திலிருந்து தேங்காய் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தேங்காய்ப்பாலின் சாத்தியமான மூலச் சந்தைகளின் பட்டியலில் உள்ள இலங்கைக்கு, இது தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதியைத் தூண்டுவதற்கான மேம்பட்ட வாய்ப்பைக் கொண்டு வருகிறது. பெரும்பாலும் தாய்லாந்தின் ஆதிக்கத்தில் இருக்கும் அமெரிக்க சந்தையை இலங்கை ஆக்கிரமிப்பதற்கு இது வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .தாய்லாந்து அமெரிக்காவில் தேங்காய் பால் சந்தைப் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் 2020 இல் கிட்டத்தட்ட 78,000 தொன்களை ஏற்றுமதி செய்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இலங்கை 52,765 மெட்ரிக் தொன் தேங்காய்ப்பாலை ஏற்றுமதி செய்து, ரூ.29,012 மில்லியன் வருமானத்தை ஈட்டியது. 2023 ஜனவரி இல், 4,421 MT தேங்காய் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு, ரூ.2,491 மில்லியன் பெறப்பட்டுள்ளது .இதேவேளை பீட்டாவின் குற்றச்சாட்டை  தாய்லாந்து  நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் ஜூரின் லக்சனாவிசிட், “பீட்டாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டானது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தைப் பாதித்திருக்கிறது. குரங்குகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மாறாக, தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement