• Nov 19 2024

யாழில் உணவகமொன்றில் மட்டத்தேளுடன் மதிய உணவு...! வாடிக்கையாளர் அதிர்ச்சி...!

Sharmi / May 28th 2024, 11:14 pm
image

உணவகமொன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் மட்டத்தேள் இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகமொன்றில் மதிய உணவை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவரின் சோற்று பொதியில் மட்டத்தேள் காணப்பட்டதாக வாடிக்கையாளரால் அப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை குறித்த உணவகம், பொது சுகாதார பரிசோதகரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும்  பின்பற்றாமல் சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் இயங்கி வருவது அவதானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றையதினம்(27) குறித்த உணவகத்தின் உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய தினம் வழக்கினை  விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உணவக உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் உணவகத்தில் திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொதுச் சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார். 

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் உணவகமொன்றில் மட்டத்தேளுடன் மதிய உணவு. வாடிக்கையாளர் அதிர்ச்சி. உணவகமொன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் மட்டத்தேள் இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகமொன்றில் மதிய உணவை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவரின் சோற்று பொதியில் மட்டத்தேள் காணப்பட்டதாக வாடிக்கையாளரால் அப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.இதனையடுத்து கடந்த சனிக்கிழமை குறித்த உணவகம், பொது சுகாதார பரிசோதகரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும்  பின்பற்றாமல் சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் இயங்கி வருவது அவதானிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நேற்றையதினம்(27) குறித்த உணவகத்தின் உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் வழக்கினை  விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உணவக உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் உணவகத்தில் திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொதுச் சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement