யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளை சொகுசு பேருந்து மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் எனும் மீன் வியாபாரியே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை
சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வியாபாரியின் சடலம், யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய சொகுசு பேருந்து; மீன் வியாபாரி பலி யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளை சொகுசு பேருந்து மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் எனும் மீன் வியாபாரியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். வியாபாரியின் சடலம், யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.