• May 21 2024

களைகட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் கொண்டாட்டம்...!samugammedia

Sharmi / Nov 17th 2023, 4:08 pm
image

Advertisement

ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவும், கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் இன்று (17) கம்பஹா மாவட்டச் செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கம்பஹா மாவட்ட இலங்கை பொதுசன முன்னணி அமைச்சர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இங்கு கம்பஹா மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் உள்ள  குறைந்த வருமானம் பெறும் 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்களும், 5000 ரூபா நிதியுதவியும், போஷாக்கான மதிய உணவும் வழங்கப்பட்டன.

அங்கு வந்திருந்த மஹா சங்கரத்ன தேரர்கள் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும், கலந்து கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் ஆசீர்வாதம் செய்தனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி,

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் தமது கட்சி வெற்றிபெறும் என்றார். அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

உரிய நேரத்தில் பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றார்.

அங்கு உபதேசம் வழங்கிய கொஸ்ஸின்ன ரஜமஹா விகாரை மற்றும் கீழ் இம்புல்கொட விஜயவர்தன ஸ்ரீ மகா விகாரை,  ஓய்வுபெற்ற அதிபர், சியன்ன கோரலே பிரதான சங்கநாயகம் வணக்கத்திற்குரிய தோரபிட்டிய ஆனந்த நஹிமியோ யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்னும் நேசிக்கின்றனர்  என்றார்.

முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் இந்த தாய்நாட்டை ஒன்றிணைக்கும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட மகத்தான தலைவராகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றும் நாட்டு மக்களின் அன்பையும் பெருமையையும் அனுபவித்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆற்றிய மகத்தான சேவை இன்னும் அன்புடன் நினைவுகூரப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

இந் நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சஹன் பிரதீப் விதான, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா ஹர்ஷனி குணவர்தன, மிலன் ஜயதிலக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட அரசியல் அதிகார சபைகள், கம்பஹா மாவட்ட மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன படிகோரள மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






 

களைகட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.samugammedia ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவும், கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் இன்று (17) கம்பஹா மாவட்டச் செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கம்பஹா மாவட்ட இலங்கை பொதுசன முன்னணி அமைச்சர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.இங்கு கம்பஹா மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் உள்ள  குறைந்த வருமானம் பெறும் 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்களும், 5000 ரூபா நிதியுதவியும், போஷாக்கான மதிய உணவும் வழங்கப்பட்டன.அங்கு வந்திருந்த மஹா சங்கரத்ன தேரர்கள் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும், கலந்து கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் ஆசீர்வாதம் செய்தனர்.நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் தமது கட்சி வெற்றிபெறும் என்றார். அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.உரிய நேரத்தில் பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றார்.அங்கு உபதேசம் வழங்கிய கொஸ்ஸின்ன ரஜமஹா விகாரை மற்றும் கீழ் இம்புல்கொட விஜயவர்தன ஸ்ரீ மகா விகாரை,  ஓய்வுபெற்ற அதிபர், சியன்ன கோரலே பிரதான சங்கநாயகம் வணக்கத்திற்குரிய தோரபிட்டிய ஆனந்த நஹிமியோ யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்னும் நேசிக்கின்றனர்  என்றார்.முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் இந்த தாய்நாட்டை ஒன்றிணைக்கும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட மகத்தான தலைவராகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றும் நாட்டு மக்களின் அன்பையும் பெருமையையும் அனுபவித்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆற்றிய மகத்தான சேவை இன்னும் அன்புடன் நினைவுகூரப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.இந் நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சஹன் பிரதீப் விதான, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா ஹர்ஷனி குணவர்தன, மிலன் ஜயதிலக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட அரசியல் அதிகார சபைகள், கம்பஹா மாவட்ட மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன படிகோரள மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement