• May 22 2024

ரணிலின் கருத்துக்கு மஹிந்த கடும் எதிர்ப்பு!- தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்து! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 7:09 am
image

Advertisement

"தேர்தலை நடத்தாமல் இருக்ககூடாது. நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

காசு இல்லை எனக் கூறி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. ஜனாதிபதியின் கருத்து தவறு. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

மேலும், மக்களின் தேவைகளை நிர்ணயிப்பதற்கான ஒரே வழி தேர்தல் என்பதால், தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.

இதேவேளை, எங்களுக்கு எப்படி வெற்றி பெறுவது என்பது தெரியும், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பதில் உறுதியாக இல்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், 13ஆவது திருத்த சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த கருத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

அத்துடன், இது தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணிலின் கருத்துக்கு மஹிந்த கடும் எதிர்ப்பு- தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்து SamugamMedia "தேர்தலை நடத்தாமல் இருக்ககூடாது. நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.காசு இல்லை எனக் கூறி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. ஜனாதிபதியின் கருத்து தவறு. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.மேலும், மக்களின் தேவைகளை நிர்ணயிப்பதற்கான ஒரே வழி தேர்தல் என்பதால், தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.இதேவேளை, எங்களுக்கு எப்படி வெற்றி பெறுவது என்பது தெரியும், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பதில் உறுதியாக இல்லை எனவும் தெரிவித்தார்.இதற்கிடையில், 13ஆவது திருத்த சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த கருத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.அத்துடன், இது தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement