• Oct 29 2024

மனித கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது...!samugammedia

Anaath / Oct 26th 2023, 3:37 pm
image

Advertisement

இந்தியாவில்  இலங்கை மக்கள் தொடர்பான மனித கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 39 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் வைத்து இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹாஜா நஜர்பீடன் எனப்படும் முகமது இம்ரான் கான் என்ற நபரே கைதாகியுள்ளார்.

குறித்த நபர் 2021 ஜூன் மாதம், முதல் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் வசிக்கும் இம்ரான் கான், சட்டவிரோத நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்தவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹாஜா நஜர்பீடன் எனப்படும் முகமது இம்ரான் கான் 38 இலங்கை பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச மனித கடத்தலுடனும் தொடர்புடையவர் எனவும் இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


மனித கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது.samugammedia இந்தியாவில்  இலங்கை மக்கள் தொடர்பான மனித கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 39 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி மாவட்டத்தில் வைத்து இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஹாஜா நஜர்பீடன் எனப்படும் முகமது இம்ரான் கான் என்ற நபரே கைதாகியுள்ளார்.குறித்த நபர் 2021 ஜூன் மாதம், முதல் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் வசிக்கும் இம்ரான் கான், சட்டவிரோத நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்தவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஹாஜா நஜர்பீடன் எனப்படும் முகமது இம்ரான் கான் 38 இலங்கை பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் சர்வதேச மனித கடத்தலுடனும் தொடர்புடையவர் எனவும் இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement