• May 21 2024

நீதிமன்றத் தீர்ப்பை மைத்திரி ஏற்க வேண்டும்! - தயாசிறி

Chithra / Jan 24th 2023, 11:36 am
image

Advertisement

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது. தீர்ப்பை ஏற்க வேண்டும். நட்டஈட்டைச் செலுத்த வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"நட்டஈட்டைச் செலுத்த மைத்திரிபாலவிடம் பணம் இல்லை. அவரது நண்பர்களிடம் உதவி கோரியுள்ளார். அவர் பணம் சம்பாதிக்கவில்லை. அவர் திருடர் இல்லை. அவருக்கு எதிராக ஊழல், மோசடி, திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் இல்லை.

அப்படிப்பட்ட ஒருவரால் 10 கோடி ரூபா தேடுவது என்பது மிகவும் கஷ்டம். எமது கட்சியால் எதுவும் உதவி செய்ய முடிந்தால் செய்வோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்தான். அவரது அரசியல் சிக்கலானது. இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்" - என்றார்.

நீதிமன்றத் தீர்ப்பை மைத்திரி ஏற்க வேண்டும் - தயாசிறி "உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது. தீர்ப்பை ஏற்க வேண்டும். நட்டஈட்டைச் செலுத்த வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"நட்டஈட்டைச் செலுத்த மைத்திரிபாலவிடம் பணம் இல்லை. அவரது நண்பர்களிடம் உதவி கோரியுள்ளார். அவர் பணம் சம்பாதிக்கவில்லை. அவர் திருடர் இல்லை. அவருக்கு எதிராக ஊழல், மோசடி, திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் இல்லை.அப்படிப்பட்ட ஒருவரால் 10 கோடி ரூபா தேடுவது என்பது மிகவும் கஷ்டம். எமது கட்சியால் எதுவும் உதவி செய்ய முடிந்தால் செய்வோம்.உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்தான். அவரது அரசியல் சிக்கலானது. இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்" - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement