எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கட்சியின் செயற்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தம்மிக்க பெரேரா மற்றும் ஜானக ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஆசனத்தில் மீண்டும் மைத்திரி. செயற்குழுவின் அனுமதிக்காக காத்திருப்பு. samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பிங்கிரிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.எவ்வாறாயினும், கட்சியின் செயற்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தம்மிக்க பெரேரா மற்றும் ஜானக ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.