உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில் தற்போது கத்தாரில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகின்றது.
நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ,அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன.
இதில் வெற்றிபெற்ற பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா தற்போது இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றது. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில் இன்றைய இறுதிப் போட்டியினை முக்கிய இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் அங்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த போட்டியை காண மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி, மோகன்லால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே,கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சென்றிருக்கின்றனர்.
முன்னதாக உலகக் கோப்பையை தீபிகா படுகோனே அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய நடிகர்கள் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் முக்கிய பிரபலங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில் தற்போது கத்தாரில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகின்றது.நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ,அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. இதில் வெற்றிபெற்ற பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா தற்போது இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றது. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.இவ்வாறான நிலையில் இன்றைய இறுதிப் போட்டியினை முக்கிய இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் அங்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.குறிப்பாக இந்த போட்டியை காண மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி, மோகன்லால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே,கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சென்றிருக்கின்றனர். முன்னதாக உலகக் கோப்பையை தீபிகா படுகோனே அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய நடிகர்கள் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.