• May 03 2024

"மலையகம் - 200" நிகழ்ச்சி ஆட்சியாளர்களுக்கே சாதகமானது - முன்னாள் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Nov 2nd 2023, 5:21 pm
image

Advertisement

இன்று மாலையில்  மலையக மக்களை  ஏமாற்றுகின்ற  செயல்பாடு  சுகதாஸ உள்ளரங்கிலே  இடம்பெறுவதாக முன்னாள் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸ்தெரிவித்துள்ளார்.

தென்மாகாண மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரச அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் அடிப்படையிலே மலையக மக்களினுடைய 200 வருடங்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் ஒரு நிகழ்ச்சியை செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை செய்வதனூடாக இந்த மக்களினுடைய விமோசனமோ விடுதலையோ கிடைக்கபோவது கிடையாது. 10 பாஸ்கள், 20 பஸ்கள் போட்டு இந்த மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். காலங்காலமாக இவர்கள் பேரம்  பேசுகின்ற அந்த செயல்பாட்டிலே விலகி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட படியில் தான் நாங்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே இன்றைய நாளிலே நடத்துகின்ற செயல்பாடு எந்த விதத்திலும் மக்களுக்கு ஒரு விடுதலையை கொடுக்கப்போவது கிடையாது. அரசாங்கதுக்கு ஒரு  மகிமையை உலக அளவிலே   நடத்துகின்ற நடவடிக்கை. 

ஆகவே நாங்கள் சொல்லுகின்றோம் அதை விடுத்து விட்டு  இந்த மக்களினுடைய காணி உரிமையை கொடுப்பதற்காகவும் மலையக மக்கள் இந்த நாட்டில் அடையாளதோடு உள்ள இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளுக்கான செயல்பாடுகளை ஆட்சியார்களும் குறிப்பாக மலையக அரசியல் வாதிகளும் முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,  பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு என்ற வகையிலே இன்றைய நாளில் ஒரு முக்கியமான செயல்பாட்டை  நாங்கள் செய்திருக்கின்றோம்.

அதாவது மலையக மக்கள் 200 வருடங்களாக இந்த நாட்டினுடைய பொருளாதாரத்துக்கும் இந்த நாட்டினுடைய அபிவிருத்திக்கும் உந்து  சக்தியாக இருந்து வருகின்ற மலையக மக்கள் நவயுக அல்லது புதிய அடிமையுகத்துக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போல தெரிகிறது. 

ஏனென்றால் 200 வருடங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிற போதிலும் அவர்கள் இன்னும் சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக பலவிதமான பிரைச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அந்த வகையிலே மலையகம் என்று சொல்லும் போது மாத்தறை, காலி, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் கணக்கில் எடுக்கப்படுவது மிகவும் குறைவு. அந்த வகையிலே மாத்தறை, காலி மாவட்டங்களில் வாழுகின்ற மக்களுக்கு தங்களுடைய மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, மற்றும் ஏனைய காரணங்களினால் அரச அதிகாரசபையினாலே  இவர்களுக்கு காணி வழங்கப்பட்டிருக்கிறது. 1993, 1995, 1998, 2003, 2018 இந்த காலப்பகுதியிலே காணி வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்தக்காணி இவர்களுக்குரியதா என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் இதுவரைக்கும் அவர்களினுடைய காணிகளை இது எங்களுடைய காணி என்று உறுதிப்படுதிக்கொள்வதற்கு சரியான ஒரு உறுதிப்பத்திரமோ அல்லது அனுமதிப்பத்திரமோ இல்லாமல் இருக்கிறது. 

அந்த வகையிலே பெருந்தூட்ட துறை மக்கள் குரலமைப்பு காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே ஒரு ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 400 இற்கும் மேற்பட்டவர்களோடு நாங்கள் ஆய்வு செய்தோம். தற்போது அந்த ஆய்விலே நாங்கள் கண்டறிந்த வற்றிலே 100 இற்கு 25 வீதமானவர்களுக்கு எந்தவிதமான அனுமதிப்பத்திரமோ அல்லது உறுதியோ வழங்கப்படாமல் இருக்கிறது. 

ஆகவே நாங்கள் ஆய்வு ஒன்றை செய்து அறிக்கை ஒன்றை தயாரித்து இன்று காணி அமைச்சரினுடைய மேலதிக செயலாளர், அதே நேரம் காணி மறு  சீரமைப்பு அதிகாரிகள் இவர்கள் எல்லாம் அளைத்து அவர்களுக்கு இந்த அறிக்கையை கொடுத்து இதோ இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு சாதகமான தீர்வை தேட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கிறோம். 

ஆகவே  இதிலிருந்து அவர்கள் இந்த மக்களினுடைய பெரியதொரு செயலணியை உருவாக்கி இந்த மக்களினுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்க்கமான முடிவை கொடுக்க வேண்டும் என்றும். 200 வருடங்களாக இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கிற மக்கள் ஒரு தேசிய இன அடையாதுடனேயே அவர்களும் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


"மலையகம் - 200" நிகழ்ச்சி ஆட்சியாளர்களுக்கே சாதகமானது - முன்னாள் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் தெரிவிப்பு.samugammedia இன்று மாலையில்  மலையக மக்களை  ஏமாற்றுகின்ற  செயல்பாடு  சுகதாஸ உள்ளரங்கிலே  இடம்பெறுவதாக முன்னாள் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸ்தெரிவித்துள்ளார்.தென்மாகாண மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரச அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் அடிப்படையிலே மலையக மக்களினுடைய 200 வருடங்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் ஒரு நிகழ்ச்சியை செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை செய்வதனூடாக இந்த மக்களினுடைய விமோசனமோ விடுதலையோ கிடைக்கபோவது கிடையாது. 10 பாஸ்கள், 20 பஸ்கள் போட்டு இந்த மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். காலங்காலமாக இவர்கள் பேரம்  பேசுகின்ற அந்த செயல்பாட்டிலே விலகி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட படியில் தான் நாங்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஆகவே இன்றைய நாளிலே நடத்துகின்ற செயல்பாடு எந்த விதத்திலும் மக்களுக்கு ஒரு விடுதலையை கொடுக்கப்போவது கிடையாது. அரசாங்கதுக்கு ஒரு  மகிமையை உலக அளவிலே   நடத்துகின்ற நடவடிக்கை. ஆகவே நாங்கள் சொல்லுகின்றோம் அதை விடுத்து விட்டு  இந்த மக்களினுடைய காணி உரிமையை கொடுப்பதற்காகவும் மலையக மக்கள் இந்த நாட்டில் அடையாளதோடு உள்ள இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளுக்கான செயல்பாடுகளை ஆட்சியார்களும் குறிப்பாக மலையக அரசியல் வாதிகளும் முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர்,  பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு என்ற வகையிலே இன்றைய நாளில் ஒரு முக்கியமான செயல்பாட்டை  நாங்கள் செய்திருக்கின்றோம்.அதாவது மலையக மக்கள் 200 வருடங்களாக இந்த நாட்டினுடைய பொருளாதாரத்துக்கும் இந்த நாட்டினுடைய அபிவிருத்திக்கும் உந்து  சக்தியாக இருந்து வருகின்ற மலையக மக்கள் நவயுக அல்லது புதிய அடிமையுகத்துக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போல தெரிகிறது. ஏனென்றால் 200 வருடங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிற போதிலும் அவர்கள் இன்னும் சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக பலவிதமான பிரைச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலே மலையகம் என்று சொல்லும் போது மாத்தறை, காலி, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் கணக்கில் எடுக்கப்படுவது மிகவும் குறைவு. அந்த வகையிலே மாத்தறை, காலி மாவட்டங்களில் வாழுகின்ற மக்களுக்கு தங்களுடைய மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, மற்றும் ஏனைய காரணங்களினால் அரச அதிகாரசபையினாலே  இவர்களுக்கு காணி வழங்கப்பட்டிருக்கிறது. 1993, 1995, 1998, 2003, 2018 இந்த காலப்பகுதியிலே காணி வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்தக்காணி இவர்களுக்குரியதா என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் இதுவரைக்கும் அவர்களினுடைய காணிகளை இது எங்களுடைய காணி என்று உறுதிப்படுதிக்கொள்வதற்கு சரியான ஒரு உறுதிப்பத்திரமோ அல்லது அனுமதிப்பத்திரமோ இல்லாமல் இருக்கிறது. அந்த வகையிலே பெருந்தூட்ட துறை மக்கள் குரலமைப்பு காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே ஒரு ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 400 இற்கும் மேற்பட்டவர்களோடு நாங்கள் ஆய்வு செய்தோம். தற்போது அந்த ஆய்விலே நாங்கள் கண்டறிந்த வற்றிலே 100 இற்கு 25 வீதமானவர்களுக்கு எந்தவிதமான அனுமதிப்பத்திரமோ அல்லது உறுதியோ வழங்கப்படாமல் இருக்கிறது. ஆகவே நாங்கள் ஆய்வு ஒன்றை செய்து அறிக்கை ஒன்றை தயாரித்து இன்று காணி அமைச்சரினுடைய மேலதிக செயலாளர், அதே நேரம் காணி மறு  சீரமைப்பு அதிகாரிகள் இவர்கள் எல்லாம் அளைத்து அவர்களுக்கு இந்த அறிக்கையை கொடுத்து இதோ இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு சாதகமான தீர்வை தேட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கிறோம். ஆகவே  இதிலிருந்து அவர்கள் இந்த மக்களினுடைய பெரியதொரு செயலணியை உருவாக்கி இந்த மக்களினுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்க்கமான முடிவை கொடுக்க வேண்டும் என்றும். 200 வருடங்களாக இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கிற மக்கள் ஒரு தேசிய இன அடையாதுடனேயே அவர்களும் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement