• Apr 30 2024

ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது! SamugamMedia

Tamil nila / Mar 11th 2023, 3:14 pm
image

Advertisement

ஊழல் வழக்கு தொடர்பாக மலேசியாவின்  முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


மலேசியாவில்  2020 முதல் 2021 வரை பிரதமராக இருந்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


இது தொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஊழல் வழக்கில் முகைதீன் யாசினை பொலிசார்  நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். 



.அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ஊழல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , பணமோசடி செய்ததமைக்காக  15 ஆண்டுகள்  சிறை தண்டனையும்  விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பதவியை விட்டு விலகிய பின்னர் குற்றம் சுமத்தப்படும் 2-வது பிரதமராக  முகைதீன் யாசின் தொக்களிக்கின்றார்.


இதற்கு முன்னராக  ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது SamugamMedia ஊழல் வழக்கு தொடர்பாக மலேசியாவின்  முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலேசியாவில்  2020 முதல் 2021 வரை பிரதமராக இருந்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இது தொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஊழல் வழக்கில் முகைதீன் யாசினை பொலிசார்  நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். .அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ஊழல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , பணமோசடி செய்ததமைக்காக  15 ஆண்டுகள்  சிறை தண்டனையும்  விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியை விட்டு விலகிய பின்னர் குற்றம் சுமத்தப்படும் 2-வது பிரதமராக  முகைதீன் யாசின் தொக்களிக்கின்றார்.இதற்கு முன்னராக  ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement