• Apr 26 2024

அடிக்கடி தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள் தவிர்க்க சிறந்த வழி! SamugamMedia

Tamil nila / Mar 11th 2023, 3:03 pm
image

Advertisement

மின்சார வாகனங்கள் அடிக்கடி தீ விபத்தில் சிக்குவதற்கு பேட்டரிகளும் ஒரு காரணம். அதனால் அவற்றை எப்படி பராமரிப்பது? என்ன காரணம் என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் மட்டுமே உங்கள் வாகனத்தை தீ விபத்தில் இருந்து தப்பிக்க வைக்க முடியும்.  



மின்சார வாகனங்களில் லித்தியம் அயன்பேட்டரிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இந்த பேட்டரிகளில் இயங்கும் நிலையில், தீ விபத்து பற்றிய புகார்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தீ விபத்தில் சிக்கினால் அவை முற்றிலும் எரிந்து சேதமாகிவிடும். பெரும் தொகை கொடுத்து வாங்கப்படும் இத்தகைய வாகனங்கள், தீ விபத்தில் எரிந்து சாம்பலானால் ஒருவரின் பொருளாதார நிலையும் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். 


அமெரிக்காவில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீவிபத்தில் சிக்கியிருக்கின்றன. அவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வாகனங்கள் அனைத்திலும் லித்தியம் அயன் பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தீ விபத்து என்றால் அந்த மின்சார வாகனங்கள் தீ பற்றி எரிவதில்லை. அந்த வாகனங்களில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரிகள் வெடித்து விடுகின்றன. இது மிகவும் ஆபத்தானது.



கலிஃபோர்னியாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனம் வெடித்தே காரணம் என கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யும்போது பல காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. பேட்டரிகளின் தவறான பயன்பாடு, காலாவதியான பேட்டரிகள் பயன்பாடு உள்ளிட்ட காரணகள் அடிகோடிட்டு சுட்டிக்காட்டப்படுகிறது.   


எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதை விட 50 மடங்கு பெரிய பேட்டரிகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் விபத்து ஏற்பட்டால் அது மிக கொடிய விளைவுகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம். இவை பேட்டரி அதிக வெப்பமடைதல், பஞ்சர் செய்யப்படுதல் அல்லது ஷார்ட் சர்க்யூட் போன்ற மின் கோளாறு ஆகியவற்றால் இத்தகைய விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


 ஆன்லைனில் பேட்டரிகளை வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யார் உருவாக்கினார்கள்? எப்போது உருவாக்கினார்கள்? பேட்டரியை உருவாக்கியவர்கள் நீண்ட மற்றும் அரசு அனுமதியை பெற்றவர்களா? என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பேட்டரியை பயன்படுத்துபவர்கள் சரியான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.  


பேட்டரியைக் கொண்ட எந்தவொரு சாதனமும் சார்ஜ் செய்யப்பட்டு குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். மேலும் அதிக நேரம் அல்லது நீங்கள் தூங்கும் போது சார்ஜ் செய்யாமல் இருக்க வேண்டும். பேட்டரி சூடானால் நீங்கள் மேற்கொண்டு சார்ஜ் செய்யக்கூடாது. குறிப்பிட்ட பேட்டரிக்கு, அனுமதிக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் விபத்துகளை தவிர்க்க முடியாது. லித்தியம் அயன் பேட்டரிகளில் இப்படியான சிக்கல் இருப்பதால் இதற்கு மாற்றாக எதிர்காலத்தில் சோடியம் அயன் பேட்டரிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிக்கடி தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள் தவிர்க்க சிறந்த வழி SamugamMedia மின்சார வாகனங்கள் அடிக்கடி தீ விபத்தில் சிக்குவதற்கு பேட்டரிகளும் ஒரு காரணம். அதனால் அவற்றை எப்படி பராமரிப்பது என்ன காரணம் என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் மட்டுமே உங்கள் வாகனத்தை தீ விபத்தில் இருந்து தப்பிக்க வைக்க முடியும்.  மின்சார வாகனங்களில் லித்தியம் அயன்பேட்டரிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இந்த பேட்டரிகளில் இயங்கும் நிலையில், தீ விபத்து பற்றிய புகார்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தீ விபத்தில் சிக்கினால் அவை முற்றிலும் எரிந்து சேதமாகிவிடும். பெரும் தொகை கொடுத்து வாங்கப்படும் இத்தகைய வாகனங்கள், தீ விபத்தில் எரிந்து சாம்பலானால் ஒருவரின் பொருளாதார நிலையும் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். அமெரிக்காவில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீவிபத்தில் சிக்கியிருக்கின்றன. அவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வாகனங்கள் அனைத்திலும் லித்தியம் அயன் பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தீ விபத்து என்றால் அந்த மின்சார வாகனங்கள் தீ பற்றி எரிவதில்லை. அந்த வாகனங்களில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரிகள் வெடித்து விடுகின்றன. இது மிகவும் ஆபத்தானது.கலிஃபோர்னியாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனம் வெடித்தே காரணம் என கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யும்போது பல காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. பேட்டரிகளின் தவறான பயன்பாடு, காலாவதியான பேட்டரிகள் பயன்பாடு உள்ளிட்ட காரணகள் அடிகோடிட்டு சுட்டிக்காட்டப்படுகிறது.   எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதை விட 50 மடங்கு பெரிய பேட்டரிகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் விபத்து ஏற்பட்டால் அது மிக கொடிய விளைவுகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம். இவை பேட்டரி அதிக வெப்பமடைதல், பஞ்சர் செய்யப்படுதல் அல்லது ஷார்ட் சர்க்யூட் போன்ற மின் கோளாறு ஆகியவற்றால் இத்தகைய விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆன்லைனில் பேட்டரிகளை வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யார் உருவாக்கினார்கள் எப்போது உருவாக்கினார்கள் பேட்டரியை உருவாக்கியவர்கள் நீண்ட மற்றும் அரசு அனுமதியை பெற்றவர்களா என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பேட்டரியை பயன்படுத்துபவர்கள் சரியான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.  பேட்டரியைக் கொண்ட எந்தவொரு சாதனமும் சார்ஜ் செய்யப்பட்டு குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். மேலும் அதிக நேரம் அல்லது நீங்கள் தூங்கும் போது சார்ஜ் செய்யாமல் இருக்க வேண்டும். பேட்டரி சூடானால் நீங்கள் மேற்கொண்டு சார்ஜ் செய்யக்கூடாது. குறிப்பிட்ட பேட்டரிக்கு, அனுமதிக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் விபத்துகளை தவிர்க்க முடியாது. லித்தியம் அயன் பேட்டரிகளில் இப்படியான சிக்கல் இருப்பதால் இதற்கு மாற்றாக எதிர்காலத்தில் சோடியம் அயன் பேட்டரிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement