பிரித்தானிய பெண்ணொருவரின் பணப்பரிமாற்ற அட்டையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே நேற்றிரவு(19) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த பிரித்தானிய பெண்ணின் பணப்பரிமாற்ற அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கொள்ளையடித்துள்ளார்.
பின்னர் ஹட்டன் நகருக்கு சென்ற சந்தேகநபர், பிரித்தானிய பெண்ணின் பணப்பரிமாற்ற அட்டையை பயன்படுத்தி அங்கு தங்க நகை, தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார்.
அதேவேளை தங்க நகையை ஹட்டனிலுள்ள தனியார் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து 78 ஆயிரம் ரூபா பெற்றுள்ளார்.
அதேவேளை, தனது நிதி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணை வேட்டையில் இறங்கிய ஹட்டன் பொலிஸார், வாடகை வாகனமொன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களவாடிய பணப்பரிமாற்ற அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர்.
இதனையடுத்து, பிரித்தானிய பெண்ணை ஹட்டனுக்கு வரவழைத்து, நிதி அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
அதேவேளை குறித்த சந்தேக நபர் கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர் ஹட்டனில் கைது. பிரித்தானிய பெண்ணொருவரின் பணப்பரிமாற்ற அட்டையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே நேற்றிரவு(19) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த பிரித்தானிய பெண்ணின் பணப்பரிமாற்ற அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கொள்ளையடித்துள்ளார்.பின்னர் ஹட்டன் நகருக்கு சென்ற சந்தேகநபர், பிரித்தானிய பெண்ணின் பணப்பரிமாற்ற அட்டையை பயன்படுத்தி அங்கு தங்க நகை, தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார்.அதேவேளை தங்க நகையை ஹட்டனிலுள்ள தனியார் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து 78 ஆயிரம் ரூபா பெற்றுள்ளார்.அதேவேளை, தனது நிதி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து விசாரணை வேட்டையில் இறங்கிய ஹட்டன் பொலிஸார், வாடகை வாகனமொன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். களவாடிய பணப்பரிமாற்ற அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர்.இதனையடுத்து, பிரித்தானிய பெண்ணை ஹட்டனுக்கு வரவழைத்து, நிதி அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதேவேளை குறித்த சந்தேக நபர் கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.