காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிவரை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தசம்பவம் நேற்று இரவு சிலாபம் - புத்தளம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ - ஹலம்பவடவன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பிடிப்பதற்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் துரத்தி சென்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த உத்தியோகத்தர் ஆராச்சிக்கட்டுவ காவல்துறை போக்குவரத்து பிரிவில் கடமையாற்றுபவர் ஆவார்.
பின்னர், அவர் சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
சந்தேக நபரை தேடி ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிய நபர். தீவிர விசாரணை காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிவரை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தசம்பவம் நேற்று இரவு சிலாபம் - புத்தளம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ - ஹலம்பவடவன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பிடிப்பதற்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் துரத்தி சென்றுள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் காயமடைந்த உத்தியோகத்தர் ஆராச்சிக்கட்டுவ காவல்துறை போக்குவரத்து பிரிவில் கடமையாற்றுபவர் ஆவார். பின்னர், அவர் சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.சந்தேக நபரை தேடி ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.