• May 22 2024

நான்கு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்..! samugammedia

Chithra / Jun 25th 2023, 7:09 am
image

Advertisement

சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்துள்ளார். 

நேற்று இரவு பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் வைத்து காரொன்றை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது காரில் மரைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

ஒன்பது பெட்டிகளில் சுமார் நான்கு இலட்சத்து இருபத்து மூவாயிரம் போதைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்   ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர் .

குறித்த போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வந்திருக்கலாமென சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.


நான்கு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர். samugammedia சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்துள்ளார். நேற்று இரவு பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் வைத்து காரொன்றை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது காரில் மரைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.ஒன்பது பெட்டிகளில் சுமார் நான்கு இலட்சத்து இருபத்து மூவாயிரம் போதைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்   ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர் .குறித்த போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வந்திருக்கலாமென சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைப் பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement