• Nov 26 2024

உணவுப் பொதி வாங்கச் சென்றவருக்கு நடந்த சம்பவம் - நடுவீதியில் கொலை

Chithra / Oct 15th 2024, 3:13 pm
image

ஜா-எல  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏகல பிரதேசத்தில் வீதியில் பயணித்து கொண்டிருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஜா-எல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த நுவன் குமார என்ற 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் உணவுப் பொதி வாங்குவதற்காக வீதியில் பயணித்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியுள்ளார்.

இதன்போது, குறித்த  நபருக்கும் மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், கொலை செய்யப்பட்ட நபர் கற்களால் மோட்டார் சைக்கிள் செலுத்துனரை தாக்க முயன்ற போது, கற்கள் அருகிலிருந்த கடை ஒன்றின் மீது விழுந்துள்ளது.

இதனையடுத்து, கடையின் உரிமையாளரும் அங்கு இருந்த நபர்கள் சிலரும் கொலை செய்யப்பட்ட நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அங்கு இருந்த நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரை காப்பாற்ற முயன்ற மேலும் மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உணவுப் பொதி வாங்கச் சென்றவருக்கு நடந்த சம்பவம் - நடுவீதியில் கொலை ஜா-எல  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏகல பிரதேசத்தில் வீதியில் பயணித்து கொண்டிருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.ஜா-எல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த நுவன் குமார என்ற 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட நபர் உணவுப் பொதி வாங்குவதற்காக வீதியில் பயணித்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியுள்ளார்.இதன்போது, குறித்த  நபருக்கும் மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர், கொலை செய்யப்பட்ட நபர் கற்களால் மோட்டார் சைக்கிள் செலுத்துனரை தாக்க முயன்ற போது, கற்கள் அருகிலிருந்த கடை ஒன்றின் மீது விழுந்துள்ளது.இதனையடுத்து, கடையின் உரிமையாளரும் அங்கு இருந்த நபர்கள் சிலரும் கொலை செய்யப்பட்ட நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது, அங்கு இருந்த நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட நபரை காப்பாற்ற முயன்ற மேலும் மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement