• May 13 2024

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்ட 3 வாரத்தில் உயிரிழந்த நபர்? விசாரணையில் வெளியான தகவல்! SamugamMedia

Tamil nila / Feb 21st 2023, 7:02 am
image

Advertisement

சிங்கப்பூரில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.


21 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்த நபர் நலமுடன் இருந்தார் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.


Rajib என்ற அந்த 28 வயது பங்களாதேஷ் நாட்டவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் வழக்கம் போல் வேலை செய்ததாகவும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ளது.


அவரது மரணம் எதிர்பாரா மருத்துவ அசம்பாவிதம் என்று அதிகாரி இம்மாதம் 15ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தார்.


ரஜிப் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதயத் தசை வீக்கத்தால் உயிரிழந்தார்.

மரணம் பெரும்பாலும் தடுப்பூசியுடன் தொடர்புடையது என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.


ரஜிப்புக்கு கடுமையான நோய் இருந்ததாகவோ வேலையிலிருந்து மருத்துவ விடுப்பு எடுத்ததாகவோ எந்தத் தகவலும் இல்லை.


2013ஆம் ஆண்டு வேலையில் சேர்வதற்கு முன் அவர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். அதற்கான தகுதியையும் அவர் நிறைவுசெய்தார்.


மரணமடைவதற்கு ஓராண்டுக்கு முன்பாக ரஜிப்புக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டதாகவும் அவரது முதலாளி கூறினார்.


2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி ரஜிப் Moderna/Spikevax COVID-19 தடுப்பூசி போட்டார். 3 வாரங்கள் கழித்து ஜூலை 9ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.


சிங்கப்பூரில் தடுப்பூசி போட்ட 3 வாரத்தில் உயிரிழந்த நபர் விசாரணையில் வெளியான தகவல் SamugamMedia சிங்கப்பூரில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.21 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்த நபர் நலமுடன் இருந்தார் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.Rajib என்ற அந்த 28 வயது பங்களாதேஷ் நாட்டவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் வழக்கம் போல் வேலை செய்ததாகவும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ளது.அவரது மரணம் எதிர்பாரா மருத்துவ அசம்பாவிதம் என்று அதிகாரி இம்மாதம் 15ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தார்.ரஜிப் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதயத் தசை வீக்கத்தால் உயிரிழந்தார்.மரணம் பெரும்பாலும் தடுப்பூசியுடன் தொடர்புடையது என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.ரஜிப்புக்கு கடுமையான நோய் இருந்ததாகவோ வேலையிலிருந்து மருத்துவ விடுப்பு எடுத்ததாகவோ எந்தத் தகவலும் இல்லை.2013ஆம் ஆண்டு வேலையில் சேர்வதற்கு முன் அவர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். அதற்கான தகுதியையும் அவர் நிறைவுசெய்தார்.மரணமடைவதற்கு ஓராண்டுக்கு முன்பாக ரஜிப்புக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டதாகவும் அவரது முதலாளி கூறினார்.2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி ரஜிப் Moderna/Spikevax COVID-19 தடுப்பூசி போட்டார். 3 வாரங்கள் கழித்து ஜூலை 9ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

Advertisement