• May 03 2024

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!samugammedia

Sharmi / Jun 24th 2023, 12:29 pm
image

Advertisement

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 21ந்தேதி  காலை மீன் பிடிக்க கடலுக்கு  சென்றனர். 

அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது  அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான  விசைப்படகையும், அதிலிருந்த தேவராஜ், நடராஜன், நாகசாமி, சந்தியா, ஜிப்ரான் ஆகிய 5 மீனவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 3 விசைப்படகையும் அதிலிருந்த  17 மீனவர்கள் என மொத்தமாக 4 விசைப்படகுகள் மற்றும் 22 மீனவர்களை சிறைபிடித்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 5 வரை யாழ்ப்பாணம்  சிறையில் அடைத்துள்ளனர். 

மீன்பிடி தடைக்காலம் நீங்கிய பின் தொழிலுக்குச் சென்ற முதல் வாரத்தில்  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக> மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், மண்டபம் மீனவர்கள் 5 பேர் உட்பட 22 தமிழக  மீனவர்களை படகுடன் உடனடியாக  விடுவிக்க கோரி மண்டபம் கோயில் வாடி வடக்கு மற்றும் தெற்கு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனால் இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையில் நங்கூரமிட்டு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 20 ஆயிரம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் இன்று வேலையிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்.samugammedia எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 21ந்தேதி  காலை மீன் பிடிக்க கடலுக்கு  சென்றனர். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது  அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான  விசைப்படகையும், அதிலிருந்த தேவராஜ், நடராஜன், நாகசாமி, சந்தியா, ஜிப்ரான் ஆகிய 5 மீனவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 3 விசைப்படகையும் அதிலிருந்த  17 மீனவர்கள் என மொத்தமாக 4 விசைப்படகுகள் மற்றும் 22 மீனவர்களை சிறைபிடித்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 5 வரை யாழ்ப்பாணம்  சிறையில் அடைத்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் நீங்கிய பின் தொழிலுக்குச் சென்ற முதல் வாரத்தில்  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக> மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், மண்டபம் மீனவர்கள் 5 பேர் உட்பட 22 தமிழக  மீனவர்களை படகுடன் உடனடியாக  விடுவிக்க கோரி மண்டபம் கோயில் வாடி வடக்கு மற்றும் தெற்கு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையில் நங்கூரமிட்டு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 20 ஆயிரம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் இன்று வேலையிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement