வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளினை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதிநிதியான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று(02) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மார்ச் மாதம் 4ஆம் திகதி வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் 20 பிரிவில் ஒரு உப பிரிவாக "அ" பிரிவை கொண்டு வந்து, மேலும் அரசாங்கம் காணி முழுவதையும் தாங்கள் எடுக்கக்கூடிய சட்டத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சட்டத்துக்கு எதிராகத்தான் கொழும்பில் காணி உரிமை அரசியல் அமைப்பு பாரிய மக்கள் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்து இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களினை இணைத்து காணி உரிமைக்கான காணி உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பை இணைத்து மன்றத்தையும் உருவாக்கி மக்களின் கருத்தையும் கேட்டுள்ளார்கள். அதில் அந்த அமைப்பு இந்த சட்டங்களை நாங்கள் எதிர்ப்பதாக அவர்கள் முடிவெடுத்துள்ளார். இந்த அரசாங்கம் மாறி மாறி இந்த சட்ட திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் தனியார் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்பதில்தான் அரசு மும்மரம் காட்டிக்கொண்டு இருக்கிறது. இதில் 62000 ஏக்கரில் பாராளுமன்றில் கரும்பு செய்கையாளருக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 35000 ஏக்கர் நிலத்தை காற்றாலை மின்சார நிறுவனத்துக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சாரத்தை அதானி நிறுவனத்துக்கு பெருமளவு காணிகளும், அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றுக்கு காரீயம் எடுப்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் மன்னாரில் எடுக்கப்படுவதால் மன்னார் தீவு முற்றாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 40000 இருக்கும் மேற்பட்ட குடும்பம் காணி இல்லாமல் இருக்கிறது. யாழ்ப்பாணமாக இருக்கட்டும், முல்லைத்தீவாக இருக்கட்டும், மன்னாராக இருக்கட்டும் , அண்ணளவாக பார்த்தால் குறைந்தது 80000 மக்கள் காணி இல்லாமல் இருக்கிறார்கள். மக்களுக்கு காணியை கொடுக்க வேண்டிய நோக்கம் அரசுக்கு இல்லை. ஏற்கனவே 30 வருட காலத்தால் மக்கள் இடம்பெயர்ந்த இடங்களில் மரங்கள் முளைத்து அந்த இடங்கள் பெரும் காடாக உருவாகினால் புதிய காடுகளை உருவாக்க சொல்லி வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா பாதுகாப்பு திணைக்களம் ஊடாக அந்த காணிகளை சுவீகரித்து அவர்கள் அதனை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் தான் 65 வீதமான பகுதி காடாக இருக்கிறது. காடுகளை கபளீகரம் செய்து அரசு பல்தேசிய கம்பனிகளுக்கு விற்பதாலே காணிப்பிரச்சினை உருவாகிறது. அதே நேரம் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பபடுகிறது அதாவது யானை மற்றும் மனித பிரச்சனை உருவாகிறது. காட்டில் உள்ள யானைகள் எல்லாம் குடிமனைக்குள் வருகிறது. இதனால் முல்லைத்தீவில் மக்கள் இறக்கும் சந்தர்ப்பங்களும் நடைபெற்றுள்ளது. எனவே மக்கள் விழிப்படைய வேண்டும். அரசினை கேள்வி கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் தீவு முற்றாக அழிவடையும் அபாயத்தில்உள்ளது. முல்லைத்தீவில் யானை மற்றும் மனித பிரச்சினை - இரத்தினசிங்கம் முரளிதரன் விடுத்துள்ள எச்சரிக்கை வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளினை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதிநிதியான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.இன்று(02) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ச் மாதம் 4ஆம் திகதி வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் 20 பிரிவில் ஒரு உப பிரிவாக "அ" பிரிவை கொண்டு வந்து, மேலும் அரசாங்கம் காணி முழுவதையும் தாங்கள் எடுக்கக்கூடிய சட்டத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சட்டத்துக்கு எதிராகத்தான் கொழும்பில் காணி உரிமை அரசியல் அமைப்பு பாரிய மக்கள் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்து இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களினை இணைத்து காணி உரிமைக்கான காணி உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பை இணைத்து மன்றத்தையும் உருவாக்கி மக்களின் கருத்தையும் கேட்டுள்ளார்கள். அதில் அந்த அமைப்பு இந்த சட்டங்களை நாங்கள் எதிர்ப்பதாக அவர்கள் முடிவெடுத்துள்ளார். இந்த அரசாங்கம் மாறி மாறி இந்த சட்ட திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் தனியார் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்பதில்தான் அரசு மும்மரம் காட்டிக்கொண்டு இருக்கிறது. இதில் 62000 ஏக்கரில் பாராளுமன்றில் கரும்பு செய்கையாளருக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 35000 ஏக்கர் நிலத்தை காற்றாலை மின்சார நிறுவனத்துக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சாரத்தை அதானி நிறுவனத்துக்கு பெருமளவு காணிகளும், அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றுக்கு காரீயம் எடுப்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் மன்னாரில் எடுக்கப்படுவதால் மன்னார் தீவு முற்றாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 40000 இருக்கும் மேற்பட்ட குடும்பம் காணி இல்லாமல் இருக்கிறது. யாழ்ப்பாணமாக இருக்கட்டும், முல்லைத்தீவாக இருக்கட்டும், மன்னாராக இருக்கட்டும் , அண்ணளவாக பார்த்தால் குறைந்தது 80000 மக்கள் காணி இல்லாமல் இருக்கிறார்கள். மக்களுக்கு காணியை கொடுக்க வேண்டிய நோக்கம் அரசுக்கு இல்லை. ஏற்கனவே 30 வருட காலத்தால் மக்கள் இடம்பெயர்ந்த இடங்களில் மரங்கள் முளைத்து அந்த இடங்கள் பெரும் காடாக உருவாகினால் புதிய காடுகளை உருவாக்க சொல்லி வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா பாதுகாப்பு திணைக்களம் ஊடாக அந்த காணிகளை சுவீகரித்து அவர்கள் அதனை சேர்த்து வைத்துள்ளார்கள். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் தான் 65 வீதமான பகுதி காடாக இருக்கிறது. காடுகளை கபளீகரம் செய்து அரசு பல்தேசிய கம்பனிகளுக்கு விற்பதாலே காணிப்பிரச்சினை உருவாகிறது. அதே நேரம் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பபடுகிறது அதாவது யானை மற்றும் மனித பிரச்சனை உருவாகிறது. காட்டில் உள்ள யானைகள் எல்லாம் குடிமனைக்குள் வருகிறது. இதனால் முல்லைத்தீவில் மக்கள் இறக்கும் சந்தர்ப்பங்களும் நடைபெற்றுள்ளது. எனவே மக்கள் விழிப்படைய வேண்டும். அரசினை கேள்வி கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.