• Jul 27 2024

பல்கலைக்கழகங்கள் சிறந்த முகாமையாளர்களை உருவாக்குகின்றார்களா? - அநுர பிரியதர்சன யாப்பா கேள்வி

Tharun / Apr 2nd 2024, 6:03 pm
image

Advertisement

பல்கலைக்கழகங்களில் சிறந்த  முகாமையாளர்களை உருவாக்குவதென்றால் ஏன் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியாக உள்ளது? என அநுர பிரியதர்சன யாப்பா இன்று(02) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்போது வினவியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், 

நிறுவனங்களை தொழில் சங்கங்களே நிர்வகித்தன. இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.  முகாமைத்துவம் பற்றி எங்களுடைய அரசாங்கங்கள் சிந்தித்து  தொழில் முயற்சிகளை இலாபமூட்டும் விதத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  அதற்கான சிறந்த  முகாமையாளர்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும்.  சிறியதொரு அரசாங்கத்தை உருவாக்கி அதனூடாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார் 

மேலும் அவர் தெரிவித்ததாவது,  இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு வலுப்பெற்று  இருக்கின்றது. வங்கிகளின் நிலைமை   ஓரளவிற்கு வலுப்பெற்று இருக்கின்றது. நமது நாட்டு அரசாங்கங்கள் நித்தமும் பொருளாதாரம் சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கின்றதே தவிர, மறுசீரமைப்புக்களைச் செய்யவில்லை.  மறுசீரமைப்புச் செய்வதை மக்கள் விரும்பமாட்டார்கள் என நினைத்து காலம் தாழ்த்தினோம். தாமதித்தோம். தனியார் மயப்படுத்தலை மேற்கொண்டால் அரசாங்கங்கள் தோல்வி பெறும் என்று நினைத்தோம். 

நிவாரணங்களை  வழங்குவதன் ஊடாக மக்களின் ஆதரவை பெறுவது சிறந்தது என்று நினைத்து அனைத்து அரசாங்கங்களும் செயற்பட்டது. பொருளாதார நெருக்கடியில் நாங்கள் இருக்கின்றோம். புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களை சாதகமாக நோக்கிக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு எரிபொருள் தேவைப்படுகின்றது. மக்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது. ஆடைத்தொழிற்சாலைகளை உருவாக்கினோம்.  சீமெந்து கூட்டுத்தாபனத்தை உருவாக்கினோம். இவ்வாறு உருவாக்கினாலும் இவை வீழ்ச்சியடைந்தது. அதற்கான  காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். 

அரசாங்கத்தினால்  தொழில் முயற்சிகளை இலாபமூட்டும் விதத்தில் ஏன் முன்னெடுத்துச் செல்ல முடியாது.  அவ்வாறு முன்னெடுத்துச் சென்றிருந்தால் பிறநாடுகளில் கூட இதன் கிளைகளை அமைத்திருக்க முடியும்.  அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முகவர்களினுடைய தவறாகவே இது இருக்க வேண்டும். மக்கள் நியமித்த முகாமையாளர்களுக்கு நிர்வகிக்க ஆற்றல் இருக்கவில்லை. இறுதியில் நிறுவனங்களை தொழில் சங்கங்களே நிர்வகித்தன. இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. 

முதலீடுகளைச் செய்தாலும் அதனை முகாமை செய்ய முடியாமல் போயிருந்தது. முகாமைத்துவத்தை சிறந்த முறையில் செய்வதற்கு தனியார் துறைக்கு எப்படி முடிகின்றது.  பரந்த பகுப்பாய்வினை செய்ய வேண்டும். உற்பத்தி திறனை சிறந்த முறையிலே முன்னெடுத்துச் செல்வதற்கான  நிறுவனங்கள் எங்களுக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.  கஸ்டப்பட்டு  அந்த நிலையிலிருந்து இந்தளவிற்கு நாங்கள் முன்னேறி இருக்கின்றோம்.

இந்த நிலையிலிருந்து முன்னோக்கி செல்வதா? அல்லாவிட்டால் மீண்டும் பின்னுக்குச் செல்வதா? என்பது தொடர்பாக  அரசாங்கம் சிந்திக்க வேண்டும். நமது நாட்டின் பொருளாதாரமானது கட்டியெழுப்பட வேண்டும். தனியார்துறை நெறிப்படுத்தலின்  கீழ் இதனை மேற்கொள்ள வேண்டும். 

பல்கலைக்கழகங்கள் சிறந்த முகாமையாளர்களை உருவாக்குகின்றார்களா? என்பது தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் உற்பத்திச் செயற்பாட்டினை தனியார்துறை ஏற்க வேண்டும். ஆனால் ஒழுங்குபடுத்தல் சம்மபந்தமாக அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும்.  

ரெலிகொம் நிறுவனத்தினை அதிகளவிலான பங்குகளை பங்குச் சந்தையில் வைத்துக் கொண்டு இந்நிறுவனத்தை தனியார் துறைக்கு வழங்கினோம். ஜப்பான் கம்பனிக்கு  முகாமைத்துவத்தை  வழங்கினோம்.  சிறந்த முறையிலே முகாமைத்துவம் செய்தது. நாங்கள் அதன் முகாமைத்துவத்தை ஏற்றுக்கொண்டோம். அதன் பின்னர் ரெலிகொம் நிறுவனம் முன்னேறி இருக்கின்றதா? அல்லது வீழ்ச்சி கண்டிருக்கின்றதா? என்பதை நான் அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன் 

முகாமைத்துவத்தை சரியாக மேற்கொள்ளாவிட்டால் இந்த பயணம் எமக்கு கிடைக்க மாட்டாது. சிறீலங்கா  விமான நிலையத்தை எமிரேட்ஸ் நிறுவனத்தின் கீழ்  கொண்டு சென்ற பொழுது  அதிக இலாபமூட்டியது.  ஆனால் சொந்த முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு சென்ற போது நட்டமீட்டியது. 

முகாமைத்துவம் பற்றி எங்களுடைய அரசாங்கங்கள் சிந்திக்க வேண்டும். இப்போது இந்த அரசாங்கத்தின் காலம் முடிவடைந்து வருகின்றது எனவே ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் இது பற்றி கவனஞ் செலுத்த வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்கள் பற்றி கவனம்  செலுத்தாமல் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணத்தை வழங்கலாம் என்று நாங்கள் சிந்தித்தால்  அது நடைமுறைச் சாத்தியமற்றது. 

அரசாங்கம் தொழில் முயற்சிகளிலிருந்து விடுபட வேண்டும். சிறியதொரு அரசாங்கத்தை உருவாக்கி அதனூடாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்  என  குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்கள் சிறந்த முகாமையாளர்களை உருவாக்குகின்றார்களா - அநுர பிரியதர்சன யாப்பா கேள்வி பல்கலைக்கழகங்களில் சிறந்த  முகாமையாளர்களை உருவாக்குவதென்றால் ஏன் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியாக உள்ளது என அநுர பிரியதர்சன யாப்பா இன்று(02) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்போது வினவியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், நிறுவனங்களை தொழில் சங்கங்களே நிர்வகித்தன. இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.  முகாமைத்துவம் பற்றி எங்களுடைய அரசாங்கங்கள் சிந்தித்து  தொழில் முயற்சிகளை இலாபமூட்டும் விதத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  அதற்கான சிறந்த  முகாமையாளர்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும்.  சிறியதொரு அரசாங்கத்தை உருவாக்கி அதனூடாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவித்ததாவது,  இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு வலுப்பெற்று  இருக்கின்றது. வங்கிகளின் நிலைமை   ஓரளவிற்கு வலுப்பெற்று இருக்கின்றது. நமது நாட்டு அரசாங்கங்கள் நித்தமும் பொருளாதாரம் சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கின்றதே தவிர, மறுசீரமைப்புக்களைச் செய்யவில்லை.  மறுசீரமைப்புச் செய்வதை மக்கள் விரும்பமாட்டார்கள் என நினைத்து காலம் தாழ்த்தினோம். தாமதித்தோம். தனியார் மயப்படுத்தலை மேற்கொண்டால் அரசாங்கங்கள் தோல்வி பெறும் என்று நினைத்தோம். நிவாரணங்களை  வழங்குவதன் ஊடாக மக்களின் ஆதரவை பெறுவது சிறந்தது என்று நினைத்து அனைத்து அரசாங்கங்களும் செயற்பட்டது. பொருளாதார நெருக்கடியில் நாங்கள் இருக்கின்றோம். புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களை சாதகமாக நோக்கிக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு எரிபொருள் தேவைப்படுகின்றது. மக்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது. ஆடைத்தொழிற்சாலைகளை உருவாக்கினோம்.  சீமெந்து கூட்டுத்தாபனத்தை உருவாக்கினோம். இவ்வாறு உருவாக்கினாலும் இவை வீழ்ச்சியடைந்தது. அதற்கான  காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். அரசாங்கத்தினால்  தொழில் முயற்சிகளை இலாபமூட்டும் விதத்தில் ஏன் முன்னெடுத்துச் செல்ல முடியாது.  அவ்வாறு முன்னெடுத்துச் சென்றிருந்தால் பிறநாடுகளில் கூட இதன் கிளைகளை அமைத்திருக்க முடியும்.  அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முகவர்களினுடைய தவறாகவே இது இருக்க வேண்டும். மக்கள் நியமித்த முகாமையாளர்களுக்கு நிர்வகிக்க ஆற்றல் இருக்கவில்லை. இறுதியில் நிறுவனங்களை தொழில் சங்கங்களே நிர்வகித்தன. இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. முதலீடுகளைச் செய்தாலும் அதனை முகாமை செய்ய முடியாமல் போயிருந்தது. முகாமைத்துவத்தை சிறந்த முறையில் செய்வதற்கு தனியார் துறைக்கு எப்படி முடிகின்றது.  பரந்த பகுப்பாய்வினை செய்ய வேண்டும். உற்பத்தி திறனை சிறந்த முறையிலே முன்னெடுத்துச் செல்வதற்கான  நிறுவனங்கள் எங்களுக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.  கஸ்டப்பட்டு  அந்த நிலையிலிருந்து இந்தளவிற்கு நாங்கள் முன்னேறி இருக்கின்றோம்.இந்த நிலையிலிருந்து முன்னோக்கி செல்வதா அல்லாவிட்டால் மீண்டும் பின்னுக்குச் செல்வதா என்பது தொடர்பாக  அரசாங்கம் சிந்திக்க வேண்டும். நமது நாட்டின் பொருளாதாரமானது கட்டியெழுப்பட வேண்டும். தனியார்துறை நெறிப்படுத்தலின்  கீழ் இதனை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் சிறந்த முகாமையாளர்களை உருவாக்குகின்றார்களா என்பது தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் உற்பத்திச் செயற்பாட்டினை தனியார்துறை ஏற்க வேண்டும். ஆனால் ஒழுங்குபடுத்தல் சம்மபந்தமாக அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும்.  ரெலிகொம் நிறுவனத்தினை அதிகளவிலான பங்குகளை பங்குச் சந்தையில் வைத்துக் கொண்டு இந்நிறுவனத்தை தனியார் துறைக்கு வழங்கினோம். ஜப்பான் கம்பனிக்கு  முகாமைத்துவத்தை  வழங்கினோம்.  சிறந்த முறையிலே முகாமைத்துவம் செய்தது. நாங்கள் அதன் முகாமைத்துவத்தை ஏற்றுக்கொண்டோம். அதன் பின்னர் ரெலிகொம் நிறுவனம் முன்னேறி இருக்கின்றதா அல்லது வீழ்ச்சி கண்டிருக்கின்றதா என்பதை நான் அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன் முகாமைத்துவத்தை சரியாக மேற்கொள்ளாவிட்டால் இந்த பயணம் எமக்கு கிடைக்க மாட்டாது. சிறீலங்கா  விமான நிலையத்தை எமிரேட்ஸ் நிறுவனத்தின் கீழ்  கொண்டு சென்ற பொழுது  அதிக இலாபமூட்டியது.  ஆனால் சொந்த முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு சென்ற போது நட்டமீட்டியது. முகாமைத்துவம் பற்றி எங்களுடைய அரசாங்கங்கள் சிந்திக்க வேண்டும். இப்போது இந்த அரசாங்கத்தின் காலம் முடிவடைந்து வருகின்றது எனவே ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் இது பற்றி கவனஞ் செலுத்த வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்கள் பற்றி கவனம்  செலுத்தாமல் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணத்தை வழங்கலாம் என்று நாங்கள் சிந்தித்தால்  அது நடைமுறைச் சாத்தியமற்றது. அரசாங்கம் தொழில் முயற்சிகளிலிருந்து விடுபட வேண்டும். சிறியதொரு அரசாங்கத்தை உருவாக்கி அதனூடாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்  என  குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement