• May 19 2024

நலிந்த பிரிவினருக்கான மாதாந்த கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கு வேண்டும் - ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை!samugammedia

Sharmi / Apr 10th 2023, 4:05 pm
image

Advertisement

நலிந்த பிரிவினருக்கான மாதாந்த கொடுப்பனவு  பெருந்தோட்ட மக்களுக்கு வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அவரிடம் நேரடியாக  இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெறும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் 14 ஆயிரம் ரூபா  இக்குடும்பங்களது வங்கி கணக்குகள் மூலம்  வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் நிகழும் போது, மென்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பிரிவினருக்கு இத்தகைய மாதாந்த நலன்புரி கொடுப்பனவு வழங்குவது சரியானது. இது தொடர்பில் அரசையும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களையும் பாராட்டுகிறேன்.

ஆனால், இந்த நலன்புரி கொடுப்பனவு இலங்கையின் மிகவும் நாளாந்த பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.  பதுளை, கண்டி, நுவரேலியா, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பின் அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்ட குடும்பங்களை வழமைபோல் ஒதுக்கி விடுவதை நாம் இம்முறை ஏற்க போவதில்லை.  அதேபோல், பெருந்தோட்ட பிரதேசத்தில் தோட்டங்களில் வேலை செய்யாதோரும் வாழ்கிறார்கள். அவர்களும் குறைந்த வருமானம் பெறும் நலிந்த பிரிவினரே. அவர்களுக்கும் இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வேண்டும்.  

மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினராக கருதபடலாம்.  அப்படியானால்  அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழை குடும்பங்களுக்கு நலன்புரி கொடுபனவு கிடைக்க வழி ஏற்படும். இது எனது ஆலோசனை என ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்

நலிந்த பிரிவினருக்கான மாதாந்த கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கு வேண்டும் - ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கைsamugammedia நலிந்த பிரிவினருக்கான மாதாந்த கொடுப்பனவு  பெருந்தோட்ட மக்களுக்கு வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அவரிடம் நேரடியாக  இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இதுதொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெறும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் 14 ஆயிரம் ரூபா  இக்குடும்பங்களது வங்கி கணக்குகள் மூலம்  வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் நிகழும் போது, மென்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பிரிவினருக்கு இத்தகைய மாதாந்த நலன்புரி கொடுப்பனவு வழங்குவது சரியானது. இது தொடர்பில் அரசையும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களையும் பாராட்டுகிறேன். ஆனால், இந்த நலன்புரி கொடுப்பனவு இலங்கையின் மிகவும் நாளாந்த பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.  பதுளை, கண்டி, நுவரேலியா, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பின் அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்ட குடும்பங்களை வழமைபோல் ஒதுக்கி விடுவதை நாம் இம்முறை ஏற்க போவதில்லை.  அதேபோல், பெருந்தோட்ட பிரதேசத்தில் தோட்டங்களில் வேலை செய்யாதோரும் வாழ்கிறார்கள். அவர்களும் குறைந்த வருமானம் பெறும் நலிந்த பிரிவினரே. அவர்களுக்கும் இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வேண்டும்.   மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினராக கருதபடலாம்.  அப்படியானால்  அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழை குடும்பங்களுக்கு நலன்புரி கொடுபனவு கிடைக்க வழி ஏற்படும். இது எனது ஆலோசனை என ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement