• Jul 27 2024

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நியமங்கள் - வெளியான புதிய சுற்றுநிருபம் samugammedia

Chithra / Apr 10th 2023, 4:17 pm
image

Advertisement

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நியமங்களை உள்ளடக்கிய புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்தச் சுற்று நிருபம் இன்று(10) வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த சுற்று நிருபம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய சுற்று நிருபத்தினால் பதலீடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர், துணைவேந்தர் நியமனம் குறித்த புதிய சுற்றுநிருபம் வெளியிடப்படும் வரையில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகளை இடைநிறுத்தி வைக்குமாறு பெப்ரவரி 10 ஆம் திகதி பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார்.இந்நிலையில் புதிய சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நியமங்கள் - வெளியான புதிய சுற்றுநிருபம் samugammedia பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நியமங்களை உள்ளடக்கிய புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்தச் சுற்று நிருபம் இன்று(10) வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த சுற்று நிருபம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய சுற்று நிருபத்தினால் பதலீடு செய்யப்பட்டிருந்தது.அதன் பின்னர், துணைவேந்தர் நியமனம் குறித்த புதிய சுற்றுநிருபம் வெளியிடப்படும் வரையில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகளை இடைநிறுத்தி வைக்குமாறு பெப்ரவரி 10 ஆம் திகதி பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார்.இந்நிலையில் புதிய சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement