'இலங்கை சிங்கள சினிமாவின் அரசி' என்று வர்ணிக்கப்படும் பிரபல நடிகை மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் நேற்று (24) கொழும்பில் காலமானார்.
150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை வென்றுள்ள அவரது சினிமா நடிப்பு ஈடு இணையற்றது என பல தரப்பிலும் மெச்சப்படுகிறது.
அந்தவகையில், மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலியையும் இரங்கல்களையும் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மாலினி பொன்சேகாவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் மாலை நடைபெறவுள்ளது.
நடிகை மாலினியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி 'இலங்கை சிங்கள சினிமாவின் அரசி' என்று வர்ணிக்கப்படும் பிரபல நடிகை மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் நேற்று (24) கொழும்பில் காலமானார்.150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை வென்றுள்ள அவரது சினிமா நடிப்பு ஈடு இணையற்றது என பல தரப்பிலும் மெச்சப்படுகிறது.அந்தவகையில், மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலியையும் இரங்கல்களையும் செலுத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மாலினி பொன்சேகாவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் மாலை நடைபெறவுள்ளது.