• Sep 22 2024

நிலக்கரி விலை பாரியளவில் அதிகரிப்பு - இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதகமான நிலை!

Chithra / Jan 16th 2023, 11:37 am
image

Advertisement

உலக சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.

எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்த சில நாடுகள் மீண்டும் நிலக்கரிக்கு மாறியதன் மூலம் அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் காரணமாக உலக சந்தையில் நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வருடத்துக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 33 நிலக்கரி கப்பல்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உலக சந்தையில் அதீதமாக அதிகரித்துள்ள நிலக்கரியின் விலை எதிர்காலத்தில் படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர மேலும் தெரிவித்தார்.

நிலக்கரி விலை பாரியளவில் அதிகரிப்பு - இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதகமான நிலை உலக சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்த சில நாடுகள் மீண்டும் நிலக்கரிக்கு மாறியதன் மூலம் அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.இதன் காரணமாக உலக சந்தையில் நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.இவ்வருடத்துக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 33 நிலக்கரி கப்பல்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், உலக சந்தையில் அதீதமாக அதிகரித்துள்ள நிலக்கரியின் விலை எதிர்காலத்தில் படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement